ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சந்தையை நிர்ணயிக்கும் முக்கிய டேட்டாக்கள்


 'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்என்ற பழமொழி கமாடிட்டி சந்தைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். ஐரோப்பா பிரச்னை, வளைகுடா நாடுகளில் குண்டு வெடிப்பு என உலகளவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கமாடிட்டி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உலக அளவில் வெளியாகும் பல்வேறு டேட்டாக்களும் கமாடிட்டி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துபவை. அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள், சீனாவின் தொழில் உற்பத்தி தொடர்பான டேட்டாக்கள்  போல பலவகை டேட்டாக்களும் கமாடிட்டி சந்தையின் போக்கை தலைகீழாக திருப்பிப் போடும். எனவே, கமாடிட்டி டிரேடிங்கில் ஒருவர் வெற்றிகரமாக லாபம் சம்பாதிக்க விரும்பினால், உலக அளவிலான டேட்டாக்களை  உடனுக்குடன் தெரிந்து செயல் படுவது அவசியம். எந்தெந்த டேட்டாக்கள் எப்போது வருகின்றன?, அவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இனி பார்ப்போம்.
முக்கிய டேட்டாக்கள்!
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அந்நாட்டின் வளர்ச்சி பற்றிய டேட்டாக்கள் முக்கியமானவை. அந்த டேட்டாக்களின் பட்டியல் இதோ:
  • வேலைவாய்ப்பு டேட்டா - மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
  • ஜி.டி.பி. டேட்டா - மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை.
  • .எஸ்.எம். உற்பத்தி இண்டெக்ஸ் - மாதத்தின் முதல் வேலை நாள்.
  • வர்த்தகப் பற்றாக்குறை டேட்டா - மாதத்தின் மூன்றாவது வாரம்.
  • கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் - மாதத்தின் மூன்றாவது வாரம்.
  • புரொடக்ஷன் பிரைஸ் இண்டெக்ஸ் - மாதத்தின் மூன்றாவது வாரம்.
  • தொழிற்சாலை உற்பத்தி - மாதத்தின் மூன்றாவது வாரம்.
  • ரீடெய்ல் விற்பனை - மாதத்தின் மூன்றாவது வாரம்.
  • டியூரபிள் குட்ஸ் ஆர்டர் - மாதத்தின் கடைசி வாரம்.
  • ஃபெடரல் வங்கி மீட்டிங் - ஆண்டுக்கு எட்டு முறை.
  • அடிப்படை உலோகங்கள் இன்வென்டரி - தினமும்.
  • குரூட் ஆயில் இன்வென்டரி - ஒவ்வொரு புதன்கிழமையும்.
  • இயற்கை எரி வாயு இன்வென்டரி - ஒவ்வொரு வியாழக்கிழமையும்.

தங்க டேட்டாக்கள்!
தங்கத்தில் டிரேட் செய்கிறவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியவை...
  • முக்கிய நாடுகள், அதன் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது அல்லது விற்பது.
  • தங்கத்தை உற்பத்தி செய்யும் முன்பே சுரங்க உற்பத்தி யாளர்கள் ஹெட்ஜ் செய்வது.
  • அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது.
  • பங்குச் சந்தையின் செயல்பாடுகள்.
  • விவசாயம் , காலநிலையைப் பொறுத்து உள்நாட்டில் டிமாண்ட் ஏற்படுவது.
  • அமெரிக்காவின் ஜி.டி.பி. குறைந்தால் அந்த நாட்டின் வட்டி விகிதமும் குறையும். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகமாக இருக்கும். முதலீடு அதிகமாகும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
  • அமெரிக்காவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தால், டாலர் வெளியே செல்வது அதிகரிக்கும். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
  • சீனாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரிக்கும்போது அந்த நாட்டு கரன்சி மதிப்பு  குறையும். இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து, விலை ஏறும்.
  • தங்கத்தின் விலை அதிகமாக குறைந்தால், அதன் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைத்துவிடுவார்கள். இதனால் டிமாண்ட் அதிகரித்து விலை அதிகரிக்கும். (உதாரணமாக 1990-ம் ஆண்டில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி)
  • அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது, டாலரில் இருக்கும் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்துவிடுவார்கள்.
  • ஹெட்ஜிங் என்று சொல்லப்படுகிற இந்த யுக்தியால் தங்கத்தின் விலை உயரும்.
  • அமெரிக்காவின் ராணுவ செலவுகள் அதிகரிக்கும்போது டாலரின் மதிப்பு குறையும். எனவே, தங்கம் விலை ஏறும்.

2 கருத்துகள்:

  1. உங்களின் தரவுகள் பயன் உள்ளதாக இருக்கின்றது .இதை விட உங்களிடம் மசகு எண்ணெய் வெள்ளி மற்றும் தங்கம் ஏற்ற இறக்க காரணங்களை விளக்கி தரவுகளை தருவிர்களா .

    பதிலளிநீக்கு