வியாழன், 27 ஜூன், 2013

Google India Shopping Tool

Google India Shopping Tool

Google தனது இந்திய சேவையின் மேலும் ஒரு அம்சமாக Shopping Tool ஐ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 30,000 இணையதளங்களில் இருந்து தகவல்களை சேகரித்து நமக்கு கொடுக்கும்.
எடுத்துக்காட்டாக Sony Ericsson k810i என்ற மொபைல் போனின் விலை பற்றி அறிய,
1.Google.co.in இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. Search boxல் Sony Ericsson k810i என்று Type செய்து Search செய்யுங்கள்.
3. இப்போது மேலே உள்ள Show Options என்னும் இணைப்பை அழுத்துங்கள்.

4. இடது புறம் உள்ள Shopping என்னும் இணைப்பை அழுத்தி Sony Ericsson k810i எந்த விலையில் இணையத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
5. இடது புறம் உள்ள விலையை வைத்து வடிகட்டும் வசதியினையும் நமது Price Range கொடுத்தும் உபயோகித்துக் கொள்ளலாம்.
இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்குகிறோமோ, இல்லையோ Washing Machine, TV, Refrigerator, Laptop போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் முன் அதன் விலைப் பட்டையை முடிவு செய்து குறைவான விலைக்கு வாங்க இத்தளம் உதவிடும் என நினைக்கிறேன்.
வாழ்க Google சேவை!

வேலை வாய்ப்பு தேடலில் வெற்றி பெற!

வேலை தேடுவது என்பது கனிகள் நிறைந்த மாமரத்தில் இருந்து கனியைப் பறிப்பது போன்றது.
வேலை தேடும் வேலை!
சிலர் கண்ணை மூடிக் கொண்டு மரத்தில் கல்லெறிவர்(அனைத்து    வேலைகளுக்கும் விண்ணப்பிப்பது),
சிலர் அர்ச்சுனன் போல் குறி வைத்துத் தாக்குவர்(தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு மட்டும் விண்ணப்பிப்பது),
சிலர் மாமரத்தின் அடியில் படுத்துக் கொண்டு மாங்கனிகள் கிடைக்காதா என ஏங்குவர் ( மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருப்பர்).
எது எப்படியோ!
வேலை வாய்ப்புத் தேடலில் வெற்றி பெற இணையதளங்களின் பங்கு இன்றியமையாதது. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்!

வேலை வேண்டுமா வேலை!
முதலில்,
Naukri.com இணையதளம். என் நினைவறிந்த காலத்தில் இருந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இரண்டாவதாக,
Shine.com வலைத்தளம். வேலை வாய்ப்புத் தேடலுக்கான அனைத்து அம்சங்களுடன், இதன் மற்ற சிறப்பம்சங்கள் Career Advice மற்றும் Industry Information. வேலை தேடும் வேலையின் அடுத்த அங்கமான நேர்முகத்தேர்வுக்கு இந்த இரண்டு பிரிவுகளும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
மூன்றாவதாக,
Freshersworld.com இணையம். முற்றிலும் புதியவர்களுக்கானது. கல்லூரியில் இருந்து வெளியே காலடி எடுத்து வைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. வேலைவாய்ப்புத் தேடலின் முதல் மைல் கல்லான Written Test என்றாலே பலருக்கு அலர்ஜி. இதில் வெற்றி பெற வெவ்வேறு நிறுவனங்களின் Placement Papers இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக MBA, GATE, GRE போன்ற முதுகலைக் கல்லூரிப் படிப்புகளுக்குத் தயாராவதற்கான வளங்கள் கிடைக்கின்றன.
விஸ்வநாதன் வேலை வேண்டும்!
அடுத்ததாக
Careerage.com இணையத்தளம். உங்கள் Qualification மூலம் வேலை தேடும் சிறப்பு இதன் வெற்றிக்கான காரணம். மற்ற வேலை வாய்ப்பு தேடல் இயந்திரங்களின் குறையும் இதுவே. கல்லூரியில் படித்த படிப்பை தேர்வு செய்து வேலை தேடலாம் இந்த இணையத்தில்.
ஐந்தாவதாக,
fundoodatajobs.com தளம். நீங்கள் இத்தளத்தில் நேரடியாக நிறுவனங்களுக்கே உங்கள் Resume அனுப்ப முடியும். Apply Directly to Companies என்ற வாசகத்தை தாங்கி வரும் இந்த இணையம் உங்கள் வேலை வேட்டையில், வெற்றி பெற உதவும் என்பதில் சந்தேகமில்லை.
சரி, சரி,
”அரைக் காசு சம்பளமானாலும் அரசாங்க சம்பளம், கால் காசு சம்பளமானாலும் கவர்ன்மெண்ட் சம்பளம்” என்ற நோக்கம் கொண்டவரா நீங்கள்… அரசாங்க வேலையில் உள்ள காலியிடங்கள் பற்றிய அறிவிப்புகளை தரும் தளங்கள் இதோ…sarkarjobs.comமற்றும் http://sarkari-naukri.blogspot.com/
A to Z வேலை வாய்ப்புத் தளங்களின் தொகுப்பு:

IMEI நம்பர் பற்றி….

IMEI நம்பர் என்பது The International Mobile Equipment Identification.  15 எண்கள் அடங்கிய இந்த எண்ணானது திருடு போன மொபைல் போன்களை கண்டறியவும், அரசின் உளவுத்துறையாலும் பயன்படுத்தப்படுகிறது.
IMEI என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது.
உங்களது போனின் IMEI நம்பரின் Validity அறிய இரண்டு வழிகள் உள்ளன.
*06# என்று உங்கள் மொபைலில் Type செய்து 15 இலக்க எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.
இணைய வழியில் Validity அறிய:
என்ற தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
SMS மூலம் Validity அறிய:
உங்கள்  IMEI நம்பரை கீழ்கண்டவாறு 53232 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். Charges: Rs.3 per SMS
For eg : IMEI 351868910323340 to 53232
Message displayed for correct IMEI – Success
Message displayed for incorrect IMEI – Invalid IMEI
IMEI நம்பர் இல்லாதவர்கள் அரசின் Genuine IMEI Implant programஎன்ற இந்த தளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

ஏற்கனவே பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள் இடுகைக்கு இருந்த வரவேற்பும் இந்த இடுகைக்குக் காரணம். இதுவரை இந்த இடுகை 600 முறை பார்வையிடப்பட்டுள்ளது. தினமும் ஒருவராவது இதனைப் படித்துப் பயன்பெறுகிறார். இது போன்ற பயனுள்ள இணையதளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் விளைவே பின்வருகிறது.
பணம் சம்பாதிக்க, சேமிக்க, நல்வழியில் செலவழிக்க வழிகளை தந்துதவும் இணையங்களைக் காண்போம்.
முதலாவதாக,

Google  ளின் ஒரு சேவை. இங்கே யார் வேண்டுமானாலும் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் Tips கொடுக்கலாம். Google பயனர்கள் வாக்களிக்கலாம். சிறந்த Tips முன்னணியில் இருக்கும். Finance தலைப்பிலுள்ள Tips மிகவும் பயனளிக்கும் என நம்பலாம். Online ல் பில் கட்டணங்களை செலுத்துங்கள், நேரம், பெட்ரோல் ஆகியவற்றை சேமியுங்கள் (How to Pay your BSNL Bills Online?) என்பது போன்ற ஒரு வரி Tips நிறைய காணக் கிடைக்கின்றன.
இரண்டாவதாக,

இந்த இணையதளம் பன்முகத் தன்மைகள் கொண்டது. Loan, Life Insurance, Fixed Deposits போன்ற சேவை வழங்கும் நிறுவனங்களை Compare செய்ய உதவுகிறது. உதாரணத்திற்கு Fixed Deposit ற்கு அதிக வட்டி வழங்கும் Bank ஐ 39 வங்கிகள் அடங்கிய வரிசையில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். இதே போல் Mediclaim அல்லது மற்ற Insurance சேவையில் உள்ள நிறுவனங்களின் Premium தொகையை ஆராய்ந்து நமக்குத் தேவையான திட்டத்தை தேர்வு செய்யலாம்.
மூன்றாவதாக,

Google ன் Tipjar போன்றதொரு இணையதளம். சிறிது விளக்கங்களுடன். இங்கே பணத்தை சேமிக்க மட்டுமல்ல, Rapid share போன்ற இணையதளங்களில் Download செய்யும் நேரத்தை குறைக்க, புதிதாக சந்தைக்கு வந்துள்ள Gadgets இயக்குவது பற்றி அறிய, Software ன் Shortcut அறிந்து வேலைப்பளுவைக் குறைக்க என்று ஏகப்பட்ட பயனுள்ள செய்திகள் நிரம்பிக் கிடக்கின்றன.
நான்காவதாக,

பெரும்பாலும் இணையதளங்கள் வைத்து பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கூறுகிறது. .Com Domain கள் வைத்திருப்பதன் பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இன்று இணைய உலகில் Traffic, SEO என்னும் இரு காரணிகள் ஒரு இணையதளத்தின் வளர்ச்சிக்கான அவசியமானவை. இது பற்றிய உதாரணங்களும் தரப்பட்டுள்ளன.
ஐந்தாவதாக,

இங்கே தொழில்முனைவோருக்கான குறிப்புகள், Freelancing பற்றிய கட்டுரைகள், கல்லூரி மாணவர்களுக்கான பகுதி நேரத் தொழில்கள் என பல்வேறு கட்டுரைகள் விளக்கமாக, உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆறாவதாக,

littlepeoplewealth.com இணையத்தில், 97 ways to Save Money என்னும் கட்டுரையில் உங்கள் செலவுகளைக் குறைப்பது, வருமானத்தினை அதிகரிப்பது, குழந்தைகள் செலவு, மளிகைச் செலவு போன்றவற்றைக் குறைப்பதற்கான வழிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக,
http://taxworry.com/
ஜூலை மாதம் வந்தாலே, வருமான வரி கட்டவேண்டுமே என்று அடிவயிறு கலங்க ஆரம்பித்து விடும். இங்கே வருமான வரி பற்றிய பல்வேறு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
கடைசியாக,

20 Money Hacks என்னும் தலைப்பிலான இடுகை மாறுபட்ட கோணத்தில் ஆனால் எளிமையாக நம் நிதி நிலைமயை உயர்த்தும் வழிகளைச் சொல்கிறது. உதாரணத்திற்கு உடற்பயிற்சி செய்யுங்கள் என்கிறது. இது எவ்வாறு நம் நிதி நிலைமையை உயர்த்தும்? உடற்பயிற்சி உடலை நோயிலிருந்து காக்கும். அதனால் மருத்துவச் செலவுகள் குறைவதால் சேமிப்பு உயரும் என்கின்றது. இது போன்று பல கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
பணம் பற்றிய ஒரு கூற்று:
When you have Money in Hand, only you forget who are you,
When you donot have Money in your Hand, the whole world forgets who you are.

ஹிந்தி கற்பது எளிது-2

உயிரெழுத்துக்கள்/ மெய்யெழுத்துக்கள்
இரண்டாம் பாடத்தில் ஹிந்தி உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றின் எழுத்து வடிவம் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றைக் காண்போம். வார்த்தைகள் உருவாக்கத்தில் இது மிகவும் உதவும் என்பதால் திரும்பத் திரும்ப எழுதி, உச்சரித்து பார்த்தால் விரைவாக கற்றுக் கொள்ளலாம்.
ஹிந்தி எழுத்துக்கள் தேவநகரி எனப்படுகிறது.
உயிரெழுத்துக்கள் (Vowels) மொத்தம் 11

மெய்யெழுத்துக்கள்(Consonants) மொத்தம் 36
 சரி வாருங்கள் எப்படி உச்சரிப்பது என்று பார்ப்போம்.http://www.hindibhasha.com/ என்னும் இணையத்தில் உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் உச்சரிப்பினை அறிந்து கொள்ள சிறந்த தளமாக இருக்கிறது. உச்சரிப்புகளை பழகிய பின் Test என்னும் இணைப்பில் சென்று எழுத்துக்களின் பரிட்சயத்தை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உச்சரிப்பு என்று வரும் போது Voiceless Anaspirated, Voiceless Aspirated, Voiced Anaspirated, Voiced Aspirated , nasalஎன்று ஐந்து வகையாக ஹிந்தி மெய்யெழுத்துக்கள் பகுக்கப்பட்டுள்ளன. அதெல்லாம் நமக்கெதுக்கு… மேற்கண்ட இணைய தளமே உச்சரிப்புப் பயிற்சியில் தேர்ச்சி பெற போதுமானது.

படித்த பழமொழிகள்..

ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறுவாய்.

அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.இரு வித மனிதர்களையும் மறக்கவே முடிவதில்லை.

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்…

உன் கைரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை நம்பி விடாதே
ஏனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு 

அவமானத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால் 
கடமையை நிறைவேற்ற முடியாது.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் - ஆனால் 
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைப்படுத்த கூடாது.


நான் வீழ்ந்து விட்டேன் என்று எண்ணி
யாரும் கை தட்டி சிரித்து விடாதீர்கள்
நான் வீழ்ந்ததே முளைப்பதற்கு தான் 

நாம் சொன்ன ஒரு பொய் உலகத்திற்கு தெரியும் போது 
நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு இடமாகின்றன. 

கல் மீது விழும் ஒவ்வொரு அடியும் 
கல்லை சிற்பமாக்குகிறது. 


வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே.செடியில் இலைகள் அதிகம் என்றாலும் அதில் பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்.

எல்லாத் துன்பங்களுக்கும் இரு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன 
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. 

வெற்றி என்பது நிரந்தரமல்ல 
தோல்வி என்பது இறுதியானதுமல்ல! 

புத்தகம் சேமித்து பயனில்லை 
புத்தகத்திலுள்ளவை புத்தியில் சேமிக்கப்பட வேண்டும். 

ஹிந்தி கற்பது எளிது

நம்மில ஹிந்தி தெரியாத பலர் தமிழகத்தை விட்டு மாநிலங்களுக்கு சென்றோமேயானால் ஹிந்தி தெரியாமல் தவிப்பதுண்டு. கூடுதலாக ஒரு மொழி கற்பது கூடுதலான பலமே. தொழிற்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் புதிய மொழிகள் கற்பது எளிதே!. இந்த இடுகையில் இணைய வழியாக ஹிந்தி படிபதற்கான சில பயனுள்ள தளங்களை பகிர்கிறேன்.

http://www.omniglot.com/writing/hindi.htm இந்த தளத்தின் மூலமாக ஹிந்தி எழுத்துக்களை எளிதாகக் கற்கலாம்.

இணையவழியில் பாடவாரியாக் கற்றுக்கொள்ள சில தளங்கள்
http://www.hindilanguage.org/hindi/grammar.asp
இந்த தளத்தின் மூலம் தமிழிலும் கற்கலாம்


சரி படித்துவிட்டச்சு, அனால் புதிய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லையா ? இதோ சில ஹிந்தி அகராதிகள்
http://www.alphadictionary.com/directory/Languages/Indo,045Iranian/Hindi/அனால் எதுவும் ஹிந்தி -தமிழில்லை ஹிந்தி -ஆங்கிலமாகத்தான் உள்ளது

என்னதான் 30 நாளில் கற்றுக்கொடுக்கும் புத்தகங்களோ தளங்களோ இருந்தாலும் அவசர நேரத்தில் நமக்கு தேவையான வாக்கியங்களை தருவதில்லை. புதியபுதிய வாக்கியங்களை மற்றவருடன் பேசியே கற்க வேண்டிய நிலையுள்ளது. கூகுளின் http://translate.google.com/#en|hiஇந்த சேவை மூலமாக நமக்கு தேவையான வாக்கியங்களை நாமே பெற்றுக்கொள்ளலாம்
உத: "நேற்று நீங்கள் எனக்கு நூறு ரூபாய் கொடுக்க மறந்துவிட்டீர்கள்"
என்று கேட்க வேண்டுமானால் இதில் "Yesterday you forgot to give me 100 rupees" என்று கேட்டால்
"कल तुम मुझे 100 रुपए देना भूल गया" <எனச் சரியாக மொழிமாற்றிக்கொடுக்கும். {தமிழில் அடிக்கும் வசதியில்லை, ஆங்கிலம் மூலமாக ஹிந்தி வாக்கியங்களைப் பெறலாம் } Learn Hindi via Tamil - तमिल सीखने के माध्यम से हिन्दी How to learn Hindi? - कैसे हिन्दी सीखने के लिए? Hindi websites - हिन्दी वेबसाइट Hindi to Tamil - हिन्दी के लिए तमिल

முப்பது நாளில் கற்றுக்கொடுக்கும் ஒரு இ-புத்தகம் (ஆங்கிலம்)

மேலும் ஹிந்தி தொடர்பான சுட்டிகள் இங்கே உள்ளது
அனைத்து மொழியையும் கற்றுவை தாய்மொழியில் பற்றுவை

-நன்றி:எதிர்நீச்சல்