திங்கள், 26 ஆகஸ்ட், 2013

IIT-JEE போட்டி தேர்வு

IIT-JEE போட்டி தேர்வு :

இந்தியாவில்மிகவும் பெருமை வாய்ந்த போட்டி, கடுமையான போட்டி தேர்வு. மாணவர்களைவிட பெற்றோர்களின் கனவு ..டியன் என்று சொல்லி கொள்வதில்அத்தனை பெருமை, ஆனால் அதற்காக உழைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சகணக்கில் ஆனால் தேர்வு ஆகி உள்ளே செல்ல போவதோ ஆயிரங்களில மட்டுமே. உலகத்திலேயே மிகுந்த போட்டி மிகுந்த தேர்வு IIT ENTRANCE தேர்வுதான்.
 அங்கு சென்று என்ன சாதிக்க போகிறார்கள் என்பது வேறு விஷயம் ஆனால் அங்கு உள்ளே செல்வதே பெரும் சாதனைதான். எத்தனையோ கோடிகளில் பணம் புழங்கும் மிக பெரிய வியாபாரமாக மாறிவிட்டது இந்த கோச்சிங் கிளாஸ்கள். அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தனி தனி கோச்சிங் உண்டு..அனைத்துக்கும் சேர்த்து பேக்கேஜ் கூட உண்டு. இதில் மிக புகழ் வாய்ந்த இடம் ராஜஸ்தான் கோட்டா பள்ளிகள்.
அந்த சிறு நகரம்தான் கோச்சிங் கிளாஸ்களுக்கு பெயர் பெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து அங்கு வந்து படிப்பவர்கள் அதிகம் . சிறு வயதில் இருந்தே சேர்க்கை நடைபெறுகிறது. ஆறாவதில் இருந்து,பிறகு ஒன்பதாவது அதுவும் இல்லாவிட்டால் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கை நடைபெறும்..இதெல்லாம் பள்ளி சேர்க்கை அல்ல வெறும் ..டி கனவுடன் வளரும் மாணவர்களுக்கான கோச்சிங்.
இங்கு பான்சல், ரிசோநன்ஸ்,ஆர்யன் ,கேரியர் பாயின்ட் இன்னும் பல பெருமை வாய்ந்த கோச்சிங் சென்டர்கள் உள்ளன. இதில் சிறந்த சென்டர்களில் சேர நுழைவு தேர்வு உண்டு.
உடனே நுழைவுதேர்வு பற்றி பயம் வந்து விடும் அல்லவா. .கவலையே வேண்டாம் அதுக்கும் கோச்சிங் கொடுக்க கோட்டாவில் வசதி உண்டு. வருடத்திற்கு அறுபதாயிரம் மாணவர்களுக்கு குறையாமல் கோட்டாவில் தயார் ஆகிறார்கள். அத்தனை மாணவர்களும் மிக கஷ்டப்பட்டு படிக்கிறார்கள்.ஒவ்வொரு சென்ட்டரும் பெரும்பாலும் நன்கு படிக்க கூடிய மாணவர்களையே தேர்ந்து எடுக்கும்.
அங்கு பணம் கட்டி உள்ளே போய்விட்டால் ..டி.சீட் கிடைப்பது பற்றி ஒரு கியாரண்டியும் கிடையாது..ஆனால் பன்னிரெண்டாவது போகும் முன்னே சிலர் கூறிவிடுகிரார்கள்.NITக்கு மட்டும் தயாராக சொல்லி விடுவதால் ஒரு வசதி.பாடங்களை மட்டும் படிப்பது அல்லாமல் விடாமல் IITJEE தேர்வுக்கு தயாராக வேண்டும்.
இடைவிடாத தேர்வுகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றை கால அட்டவணைகளாக அச்சடித்து கையில் கொடுத்துவிடுவார்கள்சாப்பிட ஒதுக்கும் நேரம் கூட இந்த கால அட்டவணையில் இடம்பெறும். கோட்டாவில் ஒரு நாளைக்கு மாணவர்கள் ஆறு மணி நேரம் தூங்கினால் பெரிய விஷயமே .அத்தனை விஷயங்கள் படிக்க இருக்கும்.எனக்கென்னமோ IITஉள்ளே போனால் கூட இத்தனை கஷ்டப்பட்டு கற்று கொள்வார்கள் என்று தெரியவில்லை. அத்தனை பாடங்கள் இங்கு படிக்கவேண்டும்.
இந்தியா முழுவதிலும் இருந்து கோட்டாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் அதிகம்..அதனால் அது ஒரு கல்வி வியாபார கேந்திரமாக மாறிவிட்டது. நம் நாமக்கல் மாவட்டங்கள் இதற்கு முன் ஒன்றுமே இல்லை. அத்தனை பெரிய வியாபாரம் கார்பரேட் அளவில் நடைபெறுகிறது.,நிறைய மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக விட்டு விட்டு ஓடி வரும் அவலமும் நடக்கிறது.

இதற்கு நேரெதிராக புகழ்பெற்ற FIITJEE கோச்சிங் கிளாஸ் (இந்தியா முழுதும் FFITJEEக்கு கிளைகள் உள்ளன ) இருக்கும் பாட்னாவில் ஒருவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு சூப்பர் தேர்டி (super thirty ) என்ற கோச்சிங் நடத்தி வருகிறார். இங்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் ஏன் முப்பது மாணவர்களுமே IIT க்கு செல்வது வருடா வருடம் நடக்கிறது. இவரது நூறு சதவிகித ஒற்றை மனித சாதனையை எந்த வியாபார கல்வியாலும் முறியடிக்க முடியவில்லை.
ஆனந்தகுமார் என்பவரால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி பல விருதுகளை அள்ளி சென்று இருக்கிறது இந்த சூப்பர் தேர்டி. இந்தியாவின் மிக சிறந்த கோச்சிங் சென்டர் ஆக அறியப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதனாக நூற்றுகணக்கான நன்கு படிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்க்கையில ஒளி ஏற்றி வருகிறார். இவர் மூலம் IIT கல்வி நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்த பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவர்கள்.

இப்படியும் கற்று கொடுக்கலாம் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துவோம். எல்லாவற்றையும் வியாபாரம் ஆக்கினாலும் இதிலும் நல்ல முறையில் சேவை செய்ய முடியும் நல்ல மாணவர்களுக்கு உதவ முடியும் என்று எடுத்துக்காட்டிய ஆனந்தகுமார் போன்ற நல்ல உள்ளங்களால் இந்தியா மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

ஞாயிறு, 30 ஜூன், 2013

செந்தூரின் கவிதை-1:

உலகம் உருண்டு கொண்டிருக்கிறது…நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது
நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது
நொடிகள் சென்று கொண்டிருக்கிறது
ஆனால் நீ நின்று கொண்டிருக்கிறாய்.

       

வியாழன், 27 ஜூன், 2013

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு

 
 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதாம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

இன்சுலின் சுரப்பு

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதாம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதாம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும். அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.

பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.

உடல்பருமன்

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார்.

நன்றி:
நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள்

அமெரிக்கா

சர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....

இன்று, சர்க்கரை நோய் ரொம்ப `பொதுவான' வியாதியாகிவிட்டது. `40'-ஐ தாண்டிவிட்டாலே சர்க்கரை நோய் சாதாரணம் என்ற நிலை உருவாகிவிட்டது. உலகிலேயே அதிக செலவு வைக்கக்கூடிய வியாதியாக `டைப் 2' சர்க்கரை நோய் கருதப்படுகிறது. சர்க்கரை நோயுள்ள வயது வந்தோருக்கு, சர்க்கரை நோயில்லாதவர்களை விட இதய நோயால் உயிரிழப்பு அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்று அச்சுறுத்துகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு முந்திய `பிரி டயபடீஸ்' நிலையும் அதிகரித்து வருகிறது. விடலைப் பருவத்தினர் மற்றும் வயது வந்தோரில் 13 சதவீதம் பேருக்கு `பிரி டயபடீஸ்' இருக்கிறது. இவர்கள் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், 10 ஆண்டுகளில் `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படக் கூடும். `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்பட்டபின் அதைக் குணப்படுத்துவது கடினம்.
 
எனவே, `வருமுன் காப்போம்' அடிப்படையில் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது நம் கையில்தான் இருக்கிறது. `பிரி டயபடீஸ்' அல்லது சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய சில அபாய காரணிகள் இருக்கின்றன. பின்வரும் அவற்றை அறிந்து, தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுங்கள்:

1. உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.

2.சர்க்கரை நோயுள்ள பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைப் பெற்றிருப்பது.

3. வெளிநாடு வாழ் இந்தியராயிருப்பது. (வளர்ந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சர்க்கரை நோய் அபாயம் எட்டு மடங்கு அதிகம்.)

4. நான்கு கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது.

5. அதிக ரத்த அழுத்தம் (120/எம்.எம்.எச்.சி.) இருப்பது அல்லது அதற்காகச் சிகிச்சை பெறுவது.

6. எச்.டி.எல். அல்லது நல்ல கொலஸ்ட்ராலை 35 எம்.ஜி./டி.எல்.-க்குக் கீழே கொண்டிருப்பது.

7. `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' (பி.சி.ஓ.எஸ்.) இருப்பது.

8. முந்திய ரத்தப் பரிசோதனைகளில், `பாஸ்டிங் குளுக்கோஸ்' மற்றும் `குளுக்கோஸ் டாலரன்ஸ்' பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருவது.

9. இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய அதிக எடை, `அகன்தோசிஸ் நிக்ரிகன்ஸ்' (கழுத்தைச் சுற்றி அல்லது அக்குளில் அடர்நிற, பஞ்சு போல் மென்மையான தடிப்புகள்) போன்ற அறிகுறிகள்.
 
10. `கார்டியோவாஸ்குலார்' பாதிப்புக்கு உட்பட்டவராக இருப்பது. உங்களுக்குத் தற்போதைய சோதனையில் சர்க்கரை நோய் இல்லை என்று தெரியவந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனை செய்துகொள்வது அவசியம். சோதனை முடிவுகள், அபாயக் காரணிகள் அடிப்படையில் மேலும் குறுகிய இடைவெளியில் சோதனைகளைச் செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கூடும்.

சுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol)

இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு.  அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:


சுகர் (Diabetes):

Venous Plasma Glucose (mg/100ml) வெறும் வயிற்றில்:

80 லிருந்து 110  ---நன்றாகவே இருக்கிறது

111 லிருந்து  125   ---சுமார் ரகம்தான்

125 க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

Post Prandial (PP) உணவுக்கு 2 மணி நேரத்திற்குப் பின்:

120 லிருந்து 140  ---நன்றாகவே இருக்கிறது

141 லிருந்து  200   ---சுமார் ரகம்தான்

200  க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

இரத்த அழுத்தம் (Blood Pressure):

BP (mm/Hg):

130/80 ---நன்றாகவே இருக்கிறது

140/90 ---சுமார் ரகம்தான்

அதற்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கொலஸ்ட்ரால் (Cholesterol):

Cholesterol mg/100ml:

200க்குகீழே ---நன்றாகவே இருக்கிறது

200லிருந்து  240   ---சுமார் ரகம்தான்

240க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

நல்ல கொலஸ்ட்ரால்:

(HDL) mg/100ml):

45க்குமேல் ---நன்றாகவே இருக்கிறது

35லிருந்து  45   ---சுமார் ரகம்தான்

35க்குகுறைவு  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கெட்ட கொலஸ்ட்ரால்:

(LDL) mg/100ml):

100க்குகீழ் ---நன்றாகவே இருக்கிறது

100லிருந்து  129   ---சுமார் ரகம்தான்

130க்குமேல்  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்