மகிழ்வான
நோக்கமும், எண்ணங்களும் இதய நோய் வராமல்
பாதுகாக்கின்றன. இதற்கு எதிர்மறையான கவலையான
சிந்தனைகளும் , நோக்கமும், எண்ணங்களும் தாழ்வு மனப்பான்மையும்
இதய நோய் வருவதற்கு வழி
வகுக்கின்றன. 10 ஆண்டுகளின் மிகப்பெரிய எதிர்கால ஆய்வில் நெஞ்சாய்வியல் வல்லுனர்கள்
தெரிவிப்பது மன அழுத்த அறிகுறிகள்
குறைப்பதன் மூலம் நமது இதயம்
பாதுகாக்கப் படுகின்றது என்பதாகும்.இதனால் இதய
நோய் பாதிப்புகள் குறைவாக உள்ளன என்பதாகும்
கவலை என்ற சிறு கல்லை
நம் கண்ணுக்கு முன்பாக வைத்து பார்க்கும்
போது அந்த சின்ன கல்
கூட பெரிய பாராங்கல்லாக இருந்து
நம் பார்வையை அது மறைத்து விடுகின்றது.
இதனால் எதிரில் இருக்கின்ற வாய்ப்புகள்
கூட நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
வாழ்கையில்
மிகவும் செல்வ செழிப்போடு வாழ்ந்த
மனிதர் ஒருவர் செல்வமெல்லாம் இருந்த
பிறகும் கவலையோடு
காட்சியளித்தார்.
செல்வத்தனின்
பக்கத்து வீட்டிலேயே ஓர் ஏழை மிகவும்
மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். இதனை பார்த்த செல்வந்தனுக்கு
எப்படியாவது மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியத்தை அந்த ஏழை மனிதனிடமிருந்து
பெற்று விட வேண்டும் என்று
தீர்மானித்தார்.
ஏழையின்
வீட்டிற்குச் சென்ற செல்வந்தன் அந்த
ஏழையிடம் 'நீ மகிழ்ச்சியாக வாழ்வதற்கான
இரகசியம் என்ன?' என்று கேட்டான்.
ஏனழ மனிதன் தனது வீட்டின்;
கூரையில் வைத்திருந்த காகித சுருளை செல்வந்தனிடம்
நீட்டினான். 'நீ எப்போது கவலையின்
விழும்பில், துன்பத்தின் நிழலில் இருக்கின்றாயோ அப்போது
இந்த காகித சுருளை பிரித்து
பார்' என்றான்.
அந்த செல்வந்தன் அந்த காகித சுளுளை
பத்திரமாக பாதுகாத்து வந்தான். ஒருமுறை அவன் தன்
செல்வத்தை எல்லாம் இழந்து கவலையில்
ஆழ்ந்தப் போது அந்த காகித
சுருளில் இவ்வாறாக எழுதியிருந்தது.
'இதுவும்
கடந்து போகும்'.
காலம் உருண்டோடியப்போது செல்வந்தனுடைய கவலையும் மறைந்திருந்தது. செல்வந்தன் இழந்துப் போன செல்வத்தையெல்லாம் மீண்டும்
சேர்த்து மகிழ்ச்சியின் விழும்பில் நின்றுக்கொண்டிருந்தான்.
அப்போது
அவன் காலில் ஒரு காகித
சுளுள் தட்டுப்படுவதை பார்த்தான். அதனை எடுத்து விரித்து
வாசித்தப் போது இவ்வாறு எழுதியிருந்தது.
'இதுவும்
கடந்து போகும்'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக