வியாழன், 1 நவம்பர், 2012

பயம்



மனிதனின் எதிரிகள் இரண்டு

1. பயம் 2. கவலை


பயம் வலுவடைந்த வியாதி. கவலை மெல்ல அரிகும் நோய்.

பயத்தாலும், கவலையாலும் மனிதன் தன் வாழ்க்கையை நரகமாக்கி கொள்கிறான். சூழ்ந்திருப்போரின் வாழ்வையும் கெடுக்கிறான் .

அஞ்சுவதஞ்சாமை பேதமைஎன்றார் திருவள்ளுவர்

பயபடக்கூடிய விஷயங்கலுக்கு நாம் பயப்பட வேண்டும்.

அதை விட்டு விட்டு எதற்கு எடுத்தாலும் பயப்படுதல் பேதையின் செயலாகும்.

பயம் பெரும்பாலும் நம் கற்பனையில் விளைவது “.


எதிர் காலத்தில் நிகழப் போகிற ஒன்றைஇப்படி போகுமோ ??

அப்படி நடக்குமோஎன்று பற்பல கற்பனையில் அவதிப்படுவதே பயம். நான்கு முறை இதே பாதையில் சிந்திக்க துவங்கியதும் பயம் நமது இயல்பாக , பழக்கமாக மாறிவிடுகிறது.

பெரும்பாலான பயம் அனைத்தும் நமது அசாதாரண கற்பனையில் விளைவது

ஒரு சம்பவம் நிகழும் முன் நமது பயங்களை எழுதி வைத்து பின்னர் அவற்றை படித்து பார்த்தால் எப்படி உப்பு பெறாத விஷயங்களுக்கெல்லாம் நாம் பயந்து இருக்கிறோம் என்று தெரியவரும். பயம் மனித இலட்சியத்தை அடியில் லேசாக குழி பறிக்கும் இயல்புடையது. மனித நம்பிக்கையை ,அசைக்க முடியாத தைரியத்தை ஆட்டங்கான வைக்கும் இயல்புடையது.

நோயினால் சாகும் முன் பயத்தினால் மனிதர்கள் மாண்டிருக்கிறார்கள். எதிரியால் தோற்கடிக்கப்படும் முன் வெறும் பயத்தால் தோற்றிருக்கிறார்கள்.

பயம்ஒரு நஞ்சு , விஷம் . நமது உடலில் பலத்த மாறுபாட்டை அது உண்டு பன்னுகிறது ,
உடலில் சக்கரையின் அளவை அதிக படுத்தி இதய துடிப்பையும் மிகைப் படுத்துகிறது . சீரான உடலியக்கத்தை கெடுக்கிறது
பயம் உண்மையாக இருக்கலாம்
அல்லது கற்பனையில் இருக்கலாம்

நாம் நம்புவதற்கேற்ப நம் உடல் மாறுபடுகிறது.

எதை கண்டு பயபடுகிறோமோ அதை முதலில் செய்ய

துவங்குங்கள் , பயம் செத்து போவதை காண்பீர்கள்

என்று எமர்சன் கூறுகிறார்


இரு வகைகளில் பயத்தைப்போக்களாம்.

முதலாவதாக

ஏன் பயப்படுகிறோம் ?? ஏன் பயப்பட வேண்டும் ??

தலையா போய்விடும் ?? என்று தீவிரமாக பயத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசுவது முதல் வழி . அலசினால் காரணமில்லாததிற்கு நாம் பயப்படுவது தெரியும்.

இரண்டாவதாக ,

எதைக் கண்டு பயப்படுகிறோமோ அதில் சிறிது சிறிதாக நுழைந்து
காரியங்களை செய்யத் துவங்குவது
செயலே பயத்தை போக்கும் அரு மருந்து
பயம் நெஞ்சை கவ்விக்கொண்டு இருக்கும் போது
அதை அப்புறபடுத்துவது எளிதல்ல
நம்பிக்கையே பயத்தின் மாற்று
பயத்திற்கு நேர் மாறான , தைரியமான எண்ணங்களை மனத்திற்குள் விடுவது , அதை பற்றி சிந்திப்பது நல்ல பயனைத் தரும். பயம் ஒரு எண்ணம். அதை அகற்றி நம்பிக்கை, துணிவு என்ற மாற்று எண்ணங்களை வைக்காதவரை பயமே நம்மை விரட்டி அடித்துக்கொண்டிருக்கும்.

எந்த நேரமும், எந்த நிமிடமும் எதற்கும் தயார் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். எதை நினைத்தும் எப்போதும் அச்சப்படாதீர்கள். இந்த நிலையை எட்டி விட்டால் மன சஞ்சலம் ஓடிப்போய் விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக