^ ஒரு குறிப்பிட்ட பங்கு
அல்லது பங்குச் சந்தைக் குறியீட்டை
(இண்டெக்ஸ்) குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன் கூட்டியே ஒப்புக்
கொண்ட விலையில் குறிப்பிட்ட தேதி அன்று அல்லது
அதற்கு முன்பாக வாங்க அல்லது
விற்க, வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே
போடப்படும் ஒப்பந்தங்கள் ஃப்யூச்சர்ஸ் எனப்படுகிறது. இங்கே பங்கை வாங்க
அல்லது விற்க, வாங்குபவர், விற்பவர்
இருவரும் சட்டப்படி உரிமைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
^ ஆப்ஷனில்
வாங்குபவர் உரிமை பெற்றிருப்பார். ஆனால்,
அவர் சட்டப்படி பங்குகளை வாங்க அல்லது விற்க
வேண்டிய அவசியமில்லை.
^ ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் வாங்குபவர் மற்றும் விற்பவர் சம
அளவிலான ரிஸ்க்கை கொண்டிருப்பார்கள். ஆப்ஷனில் அப்படி அல்ல. இருவருக்குமான
ரிஸ்க் வெவ்வேறாக இருக்கிறது.
^ வாங்குபவரின்
(ஆப்ஷனை வைத்திருப்பவர்) நஷ்டம், ஒரு குறிப்பிட்ட
அளவாக பிரீமியத் தொகையாக (ஆப்ஷன் விலை) இருக்கும்.
அதே நேரத்தில், லாபம் அளவில்லாததாக இருக்கும்.
ஆப்ஷனை விற்பவர் அல்லது ஆப்ஷனை விற்றவருக்கான
நஷ்டம் அளவில்லாதது. அதே நேரத்தில், லாபம்
என்பது ஆப்ஷனை வாங்குபவரிடமிருந்து பெற்ற
பிரீமிய தொகையாக இருக்கும்.
^ ஃப்யூச்சர்ஸ்
ஒப்பந்தங்களின் விலை, முக்கியமாக பங்குகளின்
விலையால் மாற்றத்துக்கு உள்ளாகும். பங்குகளின் விலை, ஒப்பந்தம் காலாவதியாவதற்கு
இருக்கும் மீதியுள்ள நாட்கள், கடன் சந்தையில் வட்டி
விகிதம், பங்கின் விலை ஏற்றம்
மற்றும் இறக்கம் போன்றவை ஆபஷன்ஸ்
விலையில் மாற்றத்தை உருவாக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக