அட அது என்னங்க மியூச்சுவல்
ஃபண்ட், ஒண்ணுமே புரியல இதுல
எப்படிங்க நான் முதலீடு செய்றது
என்று நினைப்பவர்களுக்கு இது சரியான இடம்
இல்லங்க.ஏன்னா இங்க பொறுமை
ரொம்ப முக்கியம் ஸார். நீங்க நினைக்கற
மாதரி மியூச்சுவல் ஃபண்ட்-ல் முதலீடு
என்பது ரொம்ப கஸ்டமான விஷயம்
கிடையாது.பட்டிக்காடு முதல் பட்டினம் வரை
உள்ள ஒவ்வொருவரும் முதலீடு செய்ய வேண்டிய
இடம் இது என்றால் மிகையாகது.
பங்குச்சந்தை முதலீடு லாபம் அதிகம்,அதே சமயம் ரிஸ்க்கும்
அதிகம்.வங்கி ஃபிக்சட் டெபாசிட்
ரிஸ்க் இல்லை என்றாலும்,வருமானம்
மிகக் குறைவுதான்.இந்த இரண்டு இல்லாமல்
மூன்றாவது ஒன்று அதுதான் மியூச்சுவல்
ஃபண்ட்(mutual fund).ரிஸ்க் குறைவு அதே
சமயம் லாபம் அதிகம்.
மியூச்சுவல்
ஃபண்ட் என்றால் என்ன ?
பாமரனுக்கும்
புரியும்படி சொன்னால் பல பேரிடம் பணத்தை
வசூல் செய்து லாபம் தரும்
இடங்களில் முதலீடு செய்து அந்த
பணத்தை பெருக்கி நமக்கு திருப்பி தருவதுதான்
மியூச்சுவல் ஃபண்ட்.
உங்கள்
வயது ஏற்ற திட்டம், குறைந்த
முதலீடு,ரிஸ்க் அளவை நாமே
நிர்ணயியக்கும் வசதி, எதிர்பார்த்தை விட
அதிகமான லாபம்,முதலீடு செய்த
தொகையின் லாபத்தை வீட்டில் இருந்தபடியே
நினைத்த நேரத்தில் தெரிந்த கொள்ளும் வசதி,
என்று வசதிகளை அடுக்கி கொண்டே
போகும் துறை மியூச்சுவல் ஃபண்ட்
மட்டும் தான்.
முதலீடுகள்
ஒர் பார்வை
பிக்சட் டெபாசிட் முதலீடு
மாதம் ஆயிரம் ரூபாய் என்று
பத்து வருடத்திற்கு பிறகு பிக்சட் டெபாசிட்(fixed
deposit) போட்டிருந்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை
பார்ப்போம்.
முதலீடு
செய்த தொகை(2011) (ரூபாயில்) – 1,20,000
பத்து வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தொகை(2021)
(ரூபாயில்) – 1,86,200
லாபம்
(ரூபாயில்) – 66,200
தங்கத்தில்
முதலீடு
2000 - ஆம் ஆண்டில் 4,380 (ஒரு
பவுன்) முதலீடு செய்து இருந்தால்
எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
முதலீடு
செய்த தொகை(31-03-2000) (ரூபாயில்) – 4,380(ஒரு பவுன்)
பத்து வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தொகை(30-12-2011)–
20,376(ஒரு பவுன்)
லாபம்
(ரூபாயில்) – 15,996
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
2000 - ஆம் ஆண்டில் எச்.டி.எஃப்.சி ஈக்விட்டி பண்ட்-ல்(hdfc equity fund) முதலீடு செய்து இருந்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
முதலீடு
செய்த தொகை(30-12-2000) (ரூபாயில்) – 5,000
பத்து வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தொகை(30-12-2010)–
78,774.836
லாபம்
(ரூபாயில்) – 73,774.836
மாதம்
100 ரூபாய் முதலீடு செய்யலாமா ?
நிச்சயம்
செய்யலாம். எஸ்.ஐ.பி(systematic
investment plan) மூலம் மாதம் 100 ரூபாய் முதலீடு செய்வது
சாத்தியமே(திட்டத்தை பொறுத்து).
முதலீடு
செய்ய என்ன ஆவணங்கள் தேவை?
தற்போது
மியூச்சுவல் ஃபண்ட் – களில் முதலீடு செய்ய
நினைக்கும் முதலீட்டாளர்கள் KYC(know your
client) விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தாலே போதும்.இதற்கு பான் கார்ட்
அவசியம் தேவை. இந்த KYC-யை
பங்குச் சந்தயில் முதலீடு செய்ய நினைப்பவர்கள்
டீமேட் கணக்கு தொடங்குவதற்காக பயன்படுத்திக்
கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கவனம் தேவையா?
இந்தியாவில்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல
இருந்தாலும் சரியான பண்ட்-யை
தேர்ந்தெடுப்பது உங்கள் கையில் தான்
உள்ளது. இதற்கு அடிப்படை அறிவை
வளர்த்துக் கொண்டு இறங்குவது மிகவும்
பாதுகாப்பானது. மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய பல
புத்தங்கள் மார்கெட்-ல் எராளமாய் கிடைக்கின்றன.வார இதழான நாணயம்
விகடனில் இது பற்றிய பயனுள்ள
தகவல் வருவது கூடுதல் சிறப்பு.
பங்குச் சந்தை பற்றிய மாறாத உண்மைகள்:
பதிலளிநீக்கு1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
2. எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.
3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா.... ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.
for more:
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html