வியாழன், 13 செப்டம்பர், 2012

பங்குச்சந்தை ஒரு பார்வை


 ங்குச்சந்தை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது -- பங்கு சந்தை பற்றி தெரிந்தவர்களுக்கு ஹர்சர் மேத்தா - தெரியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம் -- இப்படி தான் நம் மக்கள் தவறாக எல்லாவற்றையும் புரிந்து கொள்வது போல இதையும் புரிந்து வைத்துள்ளனர் . ஆனால் அப்படி அல்ல பங்கு சந்தை என்பது ஒரு ஊகவணிகம் . ஊக வணிகம் என்றால் தகவல் மற்றும் செய்திகள் அடிப்படையிலான வணிகம் ஆகும் . சந்தை மற்றும் அதன் அனைத்து விபரங்களையும் கீழே வரிசையாக பார்க்கலாம் .

பங்குகள் என்றால் என்ன ?
எந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது விரிவாக்க பணிகளுக்காக தேவைப்படும் தொகையினை மக்களிடம் பெற்று அதை கொண்டு தனது விரிவாக்க பணிகளை செய்யலாம் . அந்நிலையில் மக்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கு உண்டான அளவுக்கு பங்குகள் வழங்கப்படும் . இந்த பங்கு வெளியீடுக்கு அந்த நிறுவனங்கள் முறையான நிர்வாகம் மற்றும் வரவு செலவுகள் பிற செயல்பாடுகளையும் குறித்து செபிக்கு விண்ணப்பிக்க வேண்டும்..

அந்த விபரங்களை பரிசீலித்து செபி அவர்களுக்கு பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கும் . அந்த பங்குகள் எல்லாம் முகமதிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் . அவை நிறுவனத்தின் மொத்த மதிப்பில் இருந்து (இருப்பு ,சொத்து , கடன் , இதர இருப்புகள் ஆகியவற்றை கொண்டு) மொத்த மதிப்பில் இருந்து 10 ரூபாய் மதிப்பிற்கு கணக்கிட்டு பங்குகளை முகமதிப்பில் வெளியிடுவார்கள் . வெளியீட்டுக்கு பிறகு அந்த நிறுவனக்கள் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்படும் .

IPO ( INITIAL PUPLIC OFFER) :

புதிய பங்கு வெளியீட்டில் இறங்கும் நிறுவனங்கள் செபி அமைப்பில் முறையான அனுமதி பெற்று பின்பு நேசனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் , மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சஞ் ஆகிய எக்ஸ்செஞ்ச்களில் அறிவிப்பு செய்து பின்னர் பங்கு வெளியீட்டு விண்ணப்பங்களை மக்களுக்கு வழங்கும் அதன் விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஸ்டாக் புரோக்கர் மற்றும் வங்கிகளிலும் கிடைக்கும் .

அதற்க்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவு தேதியும் அறிவிப்பார்கள் . விலைகள் விண்ணப்ப படிவத்தில் இருக்கும் பங்குகளின் முகமதிப்பு 10 - ஆனால் விலை சந்தையில் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் விலைகளை வைத்து( பிரிமியம் ) இருக்கும் . ஆனால் 10 ரூபாய்க்கு கிடைக்காது . நாம் முதலீடு செய்வது என முடிவு செய்ததும் விண்ணப்ப படிவத்தில் நமது விபரங்களை தந்து முதலீட்டு தொகைக்கான காசோலை அல்லது வங்கி டிமாண்டு டிராப்ட் தர வேண்டும் . வரப்பெற்ற மொத்த விண்ணப்பங்களையும் கொண்டு அனைவருக்கும் வழங்குவார்கள் . விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் பிரித்து வழங்குவார்கள் .

ஸ்டாக் எக்ஸ்சேஞ் :
நமது நாட்டில் இரண்டு பங்கு சந்தைகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றன . இவற்றில் தினமும் பங்குகள் வாங்கி விற்று வர்த்தகம் நடை பெரும் இதற்க்கு இரண்டாம் தர சந்தை என அழைக்க படுகிறது . இவற்றில் பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே நடை பெரும் பரிமாற்றத்தை மட்டும் பங்கு சந்தைகள் செய்து தருகின்றன . அதனால் எக்ஸ்சேஞ் களுக்கு பரிமாற்ற கமிசன் மற்றும் நிறுவனக்கள் செலுத்தும் ஆண்டு சந்தா கிடைக்கிறது . அரசாங்கத்திற்கு வரி கிடைக்கிறது .

செபிக்கு பங்குகள் அனுமதியின் பொழுது செலுத்தும் கட்டணம் மற்றும் விதிமுறை மீறுபவர்கள் செலுத்தும் அபராதங்கள் செபிக்கு கிடைக்கிறது .

பங்குகள் அந்தந்த நிறுவனங்கள் முறைப்படி குறிப்பிட்ட அளவிலான பங்குகளை லிஸ்ட் செய்து இருப்பார்கள் அதற்க்கு எக்ஸ்சேஞ் இக்கு குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும் . இதற்க்கு முன்னர் கூறிய பி என்பது முதல் தர சந்தை , இது இரண்டாம் தர சந்தை புரிகிறதா நண்பர்களே . இது போல முதல் தர சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாளில் மட்டும் லிஸ்டிங் என்ற பெயரில் வணிகம் செய்யப்படும் . அடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக வர்த்தகம் சந்தையில் அந்த பங்குகளின் மீது மேற்க்கொள்ளப்படும் .

பங்கு சந்தையில் எப்படி வியாபாரத்தை ஆரம்பிப்பது? :

பங்கு சந்தையில் வியாபாரம் செய்ய முதலில் சந்தை பற்றிய சிறிதளவாவது அனுபவம் தேவை . பின்னர் வருமான வரி அட்டை மற்றும் உங்களது முகவரி சான்று பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை தந்து டிமாட் கணக்கினை உங்கள் பகுதியில் உள்ள ஸ்டாக் ஆபீஸ் இல் துவங்க வேண்டும் பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் . அந்த கணக்கில் தொகையினை செலுத்தி பங்குகள் வாங்க விற்க பயன் படுத்தலாம் . கணக்கினை சம்பந்தப்பட்ட நிறுவனம் பார்த்து கொள்ளும் . கணக்கின் விபரங்களை தினமும் மின் அஞ்சல் முறையில் உங்களுக்கு வழங்கும்
முறையீடு :
மேற்குறிப்பிட்ட தங்களது கணக்கில் கோளாறுகள் ஏதேனும் ஏற்ப்பட்டால் நீங்கள் பங்கு சந்தையில் அதற்கென நியமிக்கப்பட்ட நபர்களிடம் மின் அஞ்சல் மற்றும் கடிதம் வாயிலாக முறையிடலாம் . சந்தைகள் பற்றி குறைபாடு என்றால் செபியில் முறையிடலாம் .
பங்கு பிரிப்பு
சந்தையில் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே செல்லும் பங்குகளை மக்கள் விலை அதிகம் என வியாபாரம் செய்ய மாட்டார்கள். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வியாபாரம் அதிகமாக ஆகாத பட்சத்தில் பங்குகளின் முக மதிப்பை பிரிப்பார்கள். உதாரணம் : விலை 2500 இந்த அளவில் இருக்கும் போதுபங்கு பிரிப்பார்கள் . அவை முக மதிப்பில் 2 : 5, 1: 10, 5 : 2, ஆகிய முறைகளில் பிரிப்பர் . பங்கு பிரிப்பிற்கு பிறகு பங்குகளின் விலைகள் முறையே 500 , 250, 1250 என வந்து விடும். அனைவருக்கும் வியாபாரம் , செய்ய வசதியாக இருக்கும்.

வியாபார வகைகள் :
 A.தினசரி வணிகம்(Intra Day) :
பங்கு சந்தையில் காலை 9 : 55 க்கு தொடங்கியதும் பின்பு இடையில் எந்த நேரத்திலும் வாங்கலாம் , விற்கலாம் . ஆனால் மாலை 3 : 30 க்குள் அனைத்து பங்குகளின் கணக்கை சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் வாங்கி இருந்தால் உங்கள் கணக்கிற்கு டெலிவரி ஆகி விடும். அந்த பங்கிற்கு உண்டான முழு தொகையும் மறுதினம் சம்பந்தப்பட்ட தரகு அலுவலகத்திற்கு காசோலை வழங்க வேண்டும். விற்று இருந்தால் ஆக்சன் சந்தைக்கு சென்று வாங்கி விடுவார்கள். நமக்கு நஷ்டம் ஆனாலும்...

 B.உடனடி வணிகம்(Short Selling):
இது சற்று ஆபத்தானது. பங்கு சந்தையில் பங்கு வியாபாரம் சுணக்கமாக உள்ள சூழ்நிலையில் தவறான தகவல்கள் மற்றும் சந்தையை பாதிக்கும் காரணிகளால் சந்தை இறங்கும். அல்லது பங்குகளின் விலை சரியும் என்ற ஊகத்தில் கையில் பங்குகள் இல்லாமலேயே பங்குகளை விற்று வைப்பது . அதிக விலையில் விற்று வைத்து பின்பு இறங்கி வரும் போது வாங்கி விட வேண்டும். லாபம் கிடைக்கும். அதே சமயம் மாலை 3 : 30 க்குள் லாப நஷ்டம் எது ஆனாலும், என்ன விலை ஆனாலும் வாங்கி கணக்கை சரி செய்ய தவறினால் அடுத்த நாள் "SHORT FALL " ஆகி விடும்.

பின்னர் அதற்கு அடுத்த நாள் எக்ஸ்சேஞ்சில் ஆக்சன் மார்கெட்டில் என்ன விலைக்கு விற்பவர் இருக்கிறாரோ அந்த விலைக்கு வாங்கி கணக்கை சரி செய்யும் . இதில் வரும் லாப நஷ்டம் அல்லாமல் எக்ஸ்சேஞ் அபராத தொகை விதிக்கும். இதை தங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொள்வார்கள். சமயத்தில் குறைவாக அபராதம் விதிக்கலாம். அல்லது இது போல இனி நடக்க கூடாது என அதிகமாகவும் அபராதம் விதிக்க வாய்ப்பு உண்டு. இது முழுவதும் எக்ஸ்சேஞ்சின் செயல்பாடு மட்டும் தான் .

  C.டெலிவரி செல்லிங் :
இந்த முறை மிகவும் சிறப்பானது . பங்குகளை வாங்கி உண்டான தொகையினை செலுத்தி பங்குகளை கணக்கில் வைத்து கொள்ளலாம். பங்குகளின் விலை அதிகமாகும் போது விற்று லாபம் அடையலாம்.

சந்தையை பாதிக்கும் காரணிகள் :
* உலக நாடுகளில் நிகழும் அசம்பாவிதங்கள்.
* உலக நாடுகளின் பங்கு சந்தைகளின் போக்கு
* உள்நாட்டு அசம்பாவிதங்கள் மற்றும் அது சம்பந்தமான வதந்திகள்
* நிலையற்ற அரசியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள்
* ரிசர்வ் வங்கி பற்றிய அறிவிப்புகள்
* இன்பிலேசன் அதிகமாகுதல்
* ஜி டி பி மற்றும் பி டேட்டா சரியில்லாமல் போதல்.
* கச்சா என்னை விலை ஏற்றம்
* அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் திடீரென பங்குகளை விற்பது .
* முக்கிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சரியில்லாமல் போதல்.

இதை தவிர பங்கு வர்த்தகத்தில் ஏழு விதமான வியாபாரிகள் உள்ளனர்.
அவர்கள்,
* INVESTOR - இவர்கள் நிறுவனத்தின் மதிப்பறிந்து முதலீடு மட்டும் செய்வர்.
விற்பனை செய்வதை சில காலம் என்ன மாட்டார்.
* TRADER - இவர் தொழிலே இது தான். இன்று வாங்கி இன்றே விற்று லாபத்தை எடுத்து கொள்வார்.
* SPECULATOR - இவர் எல்லோரையும் (பங்கு வர்த்தகத்தில் ) ஏமாற்றுபவர். சம்பந்தம் இல்லாமல் பங்குகளின் விலைகளை வேகமாக ஏற்றுவதும் இறக்குவதும் தான் இவர்களது வேலை.இதில் தான் இவர்களுக்கு ஆதாயம். இவர்களால் சந்தை வேகமாக சரியும் மற்றும் ஏறும் வாய்ப்புகள் இருக்கும்.
* OPERATORS - இவர்கள் சில நிறுவன பங்குகளை மட்டும் வியாபாரம் செய்வர். அதிக ஏற்ற இறக்கங்களை சில பங்குகளில் மட்டும் எந்த வித செய்தியும் இல்லாமல் உண்டாக்குவார்.

இவர்கள் தவிர ,

QNI - QUALIFIED NETWORTH INDIVIDUAL INVESTOR
HNI - HIGH NETWORTH INDIVIDUAL INVESTOR
FII - FOREIGN INSTITUTIONAL INVESTOR

இவர்கள் அனைவரும் சந்தையில் அதிக ஏற்ற இரக்கத்தை கொண்டு வருவார்கள். காரணம் இவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக தொகையை சந்தைக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.

பரஸ்பர நிதியகங்கள் :
இதற்கு முன் கூறியது போல் எல்லாம் வணிகம் செய்தால் ரிஸ்க் அதிகம் என்று கருதினால் பரஸ்பர நிதியகங்களில் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதியகங்கள் என்பது ஒரு பெரிய நிறுவனத்தால் நிர்வகிக்கபடுகிறது. அந்த நிறுவனங்கள் புழக்கத்தில் பரஸ்பர நிறுவனங்கள் ஆரம்பித்து மக்களிடம் பத்து ரூபாய் முக மதிப்பில் முதலீடு செய்ய சொல்வர். அதில் ஆரம்ப மற்றும் முடிவு தேதிகளை அறிவிப்பார்கள்.

மக்கள் முதலீடு செய்யும் தொகையை " FUND MANAGER " என்பவர் பங்கு சார்ந்த வியாபர திட்டங்களில் முதலீடு செய்து வரும் லாபத்தை தனது பங்கு தாரர்களுக்கு பிரித்து கொடுப்பார். அந்த லாப தொகையை பொறுத்து பரஸ்பர நிதியகங்களின் யூனிட் விலை ஏறும். அதன் விவரங்களை செய்தி தாள்கள் மூலமாகவும் வலை தளங்கள் மூலமாகவும் தினசரி பார்க்கலாம்.


முதலீட்டளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் :
ஈவு தொகை :
பங்குகள் முன்பு சொன்னது போல நிறுவனங்கள் முகமதிப்பில் வழங்குகின்றன. நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் ஈவு தொகை கிடைக்கும். அந்த ஈவு தொகை முக மதிப்பில் எத்தனை மடங்கு என்பதை நிறுவனம் தான் முடிவு செய்யவேண்டும். நிறுவனங்களின் நிகர லாபத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு ஈவு தொகைகள் கிடைக்கும். அவற்றை மொத்த பங்குகளால் வகுத்து வழங்குவர்.
இலவச பங்குகள் (போனஸ்):
நிறுவனத்திற்கு அதிகபடியான லாபம் கிடைத்தால் இலவச பங்குகள் வழங்குவர். ஆனால் அந்த நிறுவனம் குறிப்பிடும் தேதியில் உங்களது டீமாட் கணக்கில் உங்கள் தேவைக்கேற்ப பங்குகள் இருக்க வேண்டும். அந்த பங்குகளின் எண்ணிக்கையின் மடங்கில் இலவச பங்குகள் வழங்கப்படும். (உதாரணம் : 1 : 1, 1:5 , 10 : 1, 5 : 2, 10 : 2......) ஆனால் இலவச பங்குகள் வழங்கியதும் பங்குகள் விலை பாதியாக குறைந்துவிடும்.
உரிமை பங்குகள் (RIGHT'S ISSUE):
உரிமை பங்குகள் என்பது ஏற்கனவே பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் அதன் விரிவாக்க நடவடிக்கைக்காக தன் பங்கு தாரர்களுக்கு மட்டும் சந்தை விலையை விட குறைந்தா விலையில் பங்குகள் வழங்கும். இதற்கும் இலவச பங்குகளுக்கு கூறியதை போல வைத்துள்ள பங்குகளுக்கு ஏற்ப வழங்குவார்கள்.

2 கருத்துகள்:

 1. 13. நீங்கள் கற்றுக் கொள்வதை எல்லாம் கொட்ட பங்குச் சந்தை குப்பைத் தொட்டு அல்ல. தினமும் தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் தினமும் புதிது புதிதாக வணிக முறைகளைக் கையாள வேண்டாம். A GOOD ANALYST CAN NOT BE A GOOD TRADER -
  A GOOD TRADER CAN NOT BE A GOOD ANALYST.

  14. இண்டிகேட்டர், முதலீடு நிர்வாகம், டெக்னிகல், வர்த்தக மனநிலை , மாறாத வர்த்தகத் திட்டம் எல்லாம் கலந்த கலவைதான் வெற்றி என்பது. ஒன்றை மட்டும் வைத்து வெற்றி என்பது இயலாது. அளவுகளில் மாற்றம் உண்டு, ஆனால் அவசியம். சாம்பருக்கு காய், காரம், உப்பு ,தண்ணீர் எனபதைப் போல.

  15. நேற்று லாபம் வந்தது போல் இன்றும் ,அவருக்கு லாபம் வந்து விட்டதால் உங்களுக்கும் லாபம் வர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ப்ரோக்கர் அல்ல.
  FOR MORE:
  http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .
  அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
  தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
  வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CR11:01 PM 24/09/2016EDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
  நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.
  உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுவதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் "Democracy is when the indigent, and not the men of property, are the rulers." எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
  அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

  - நல்லையா தயாபரன்

  பதிலளிநீக்கு