நாம எவளோ தான் உஷாரா
இருந்தாலும், நம்மளை கேனயன் ஆகுவதற்கு
, ரூம் போட்டு யோசிக்கிறார்கள்
. புரியவில்லியா!!! நாட்டில்
நடக்கும் இன்சூரன்ஸ் மோசடிகளைதான் சொல்கிறேன் .
நீங்கள்
புதிதாக ,ஒரு insurance எடுக்கும்
போது,நம்மில் எத்தனை பேர்
, முன்னாடி application
இல் எல்லா , இடத்தையும் எழுதி
நிரப்புகிறார்கள்.எத்தனை இடத்தில் கையெழுத்து
வாங்குகிறார்கள். அட அதை விடுங்கள்
. application ஐ பூர்த்தி செய்யும்போது , நம்மிடம் 2 அல்லது
3 இடத்தில்
application இன் ஓரத்தில்
கை எழுத்து , வாங்குவார்கள் .நாமளும் அவசரத்தில் போட்டு
விடுவோம்.
பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்
தெரியுமா ?. நம்முடைய பேரை , மாற்றியோ , அல்லது
நமது , பிறந்த நாள்,வயது
, தந்தை
பெயர் ,பான் கார்டு நம்பர்
, மற்றும் என்ன என்ன மாற்ற
முடியுமோ, அவற்றை மாற்றி , அவர்களது
சிஸ்டம் இல் upload பண்ணி
விடுவார்கள். ஓரத்தில் நீங்கள் போடும், கை
எழுத்து என்பது , அவர்கள் மாற்றியதற்காக காண
ஒப்புதல்.
அதாவது
அந்த விவரங்கள் , நம் ஒப்புதலின் பெயரில்
தான் மாற்ற பட்டது என்பதற்கான கை
எழுத்து .
இப்போது
,நீங்கக் குடுத்த போட்டோ proof ,அட்ரஸ்
proof , எல்லாம் தவறாக இருக்கும். இப்போது
, நீங்கள் claim பண்ண
போகும்போது , நீங்கள் அவர் இல்லை,
வயது தவறாக இருக்கிறது , என்று
எல்லா காரணம் காட்டி, நமது
இன்சூரன்ஸ் claim ஐ
நிராகரித்து
(reject )செய்து விடுவார்கள்.நம்மிடம் , இன்சூரன்ஸ் எடுக்க சொல்லி வரும்
, agent களுக்கே இது தெரிய வாயப்பு
குறைவு .அவர்கள் , அவருடைய முதலாளிகள் என்ன
சொல்கிறார்களோ , அதை அப்படியே செய்வார்கள்.இது எல்லாமே
, மேல்மட்ட மாக நடக்கின்ற விஷயம்
.சில agent கள்
, தெரிந்தே கூட செய்ய வாயப்பு
இருக்கிறது.
எப்படி
தடுப்பது: application ஐ , முழுவதுமாக நாமே
பூர்த்தி செய்ய வேண்டும் .எல்லாம் மிகச்
சரியாக இருக்க வேண்டும் .பிறகு
, அதை ஒரு xerox எடுத்து வைத்து கொள்ளள
வேண்டும் .வேண்டிய இடத்தில் மட்டும்
தான் , கை எழுத்து போட
வேண்டும் .கண்டிப்பாக ,application இன் ஓரத்தில்
கை எழுத்து போட கூடாது.
இது இன்சூரன்ஸ் application கு
,மட்டும் அல்ல எல்லா application களுக்கும்
பொருந்தும்.
இன்சூரன்ஸ்
என்பது , நாம் இல்லை என்றால்
, நம் குடும்பத்தினர் ,பயன் பெறுவதற்கு. நமக்கே
, application fill பண்ணும் போது
, என்ன செய்தோம் , என்று நினைவு இருக்காது
,அப்படி இருக்க நமது பெற்றோர்
/மனைவிக்கு எப்படி தெரியும். இப்போது
எல்லாம் இன்சூரன்ஸ் , rejection (தள்ளுபடி) அளவு மிக அதிக
அளவில் நடந்து கொண்டு இருக்கின்றன
. நாம் எந்த சட்ட பூர்வ
நடவடிக்கையும் எதுக்கு முடியாது , ஏனெனில்
, நமது application இல் தான் எல்லாம்
தவறாக இருகிறதே.
இவை , தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
லில் தான் , அதிகமாக நடந்து
கொண்டு இருக்கின்றன .
நான் பெயர் சொல்ல
விரும்பவில்லை.அதான் நமது தொலைகாட்சி
இல் , விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்களே
!. ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் 40 சதவிகதம்
நிராகரித்து விடுகிறார்களாம்.
நீங்கள்
இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினால் , இன்சூரன்ஸ்
மட்டும் எடுங்கள் . அதை விட்டு விட்டு
,அதில் 3 வருடம்
, கட்டினால் எவளவு லாபம் கிடக்கும்
,என்று அதை ஒரு முதலிடாக
பார்க்க கூடாது,அவசியமானதாக பார்க்க
வேண்டும் .ULIP திட்டங்களை
பற்றி தான் , சொல்கிறேன்.
என்னை பொறுத்த வரை , டெர்ம்
இன்சூரன்ஸ் போதுமானது . LIC பாலிசி கள் அருமை
என்று சொல்ல வில்லை, நமக்கு
வேற வழி இல்லை என்று
தான் சொல்ல வேண்டும். இன்னும்
இந்த விசியத்தில்,கொஞ்சம் கெடுபிடிகள் வேண்டும்
என்பது என் கருத்து.
பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிறார்கள்? லாபம் பெற வழிகள்.
பதிலளிநீக்கு1. தினசரி வணிகம் (intra day trade ) மட்டுமே செய்வதால்.
நாம் எவ்வளவு தான் முன் ஜாக்கிரதையாக வர்த்தகம் செய்தாலும், தினசரி வணிகம் என்பது நிச்சயமாக பணத்தை இழக்கும் காரணிகளில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். பங்குச் சந்தைக்கு ஊக வணிகம் என்ற பெயரும் உண்டு. ஊகம் என்றால் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்பதில் ஒன்று தான் பதிலாக இருக்க முடியும். உதாரணமாக இன்று மழை வருமா? சிலர் வரும் என்போம், சிலர் வராது என்போம். ஆனால் முடிவு ஏதாவது ஒன்று தான் இருக்கும். இது தான் ஊகம். இன்று மழை வரும் என்று உங்கள் நண்பரிடம் பெட் கட்டுகிறீர்கள், இந்த வருடத்திற்குள் கட்டாயம் மழை வரும் என்று பெட் இரண்டில் எது நடக்க வாய்ப்பு அதிகம். நான் சொல்ல வருவது என்ன வென்றால் பங்குச் சந்தையில் பணம் பண்ணும் அணைத்து நபர்களும், நிறுவனங்களும் ஒருபோதும் தினசரி வணிகம் மட்டும் செய்வது இல்லை. நீங்கள் தினசரி வர்த்தகம் மட்டுமே செய்வபராக இருந்தால் உங்கள் பணத்தை இன்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்றோ ஒரு நாள் கட்டாயம் இழப்பது உறுதி.
2. ஒரே துறை - ஒரே தரம் முதலீடு.
நீங்கள் வட்டிக்குப் பணம் தரும் தொழில் செய்ய முடிவு செய்து உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்கு கொடுக்க முடிவு செய்கிறீர்கள். ஒரு லட்சம் ரூபாயினை ஒரே நபருக்கு கொடுப்பதற்கும், பத்தாயிரம் வீதம் பத்து நபர்களுக்குக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் ஒரே துறை முதலீடு என்பது. ஒரே தரம் முதலீடு என்பது நூறு ரூபாய் விலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு மொத்தமாக வாங்குவது. எந்த ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர், மீச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஒரு வருடம் ஒரு தரம் மட்டும் முதலீடு செய்து விட்டு, அடுத்த வருடம் விலை குறைந்தாலும் வாங்காமல் இருப்பது இல்லை. மொத்தத்தில் லாபம் வருமே ஒலிய, வாங்குகின்ற அனைத்தும் லாபமாக ஒருவருக்கும் நடந்ததும் இல்லை, நடக்கப் போவதும் இல்லை. மார்க்கெட் திடீர் சரிவுகளை சந்திக்கும் பொழுது ஒரு சில துறை பங்கு கீழே செல்லும் பொழுது, சில துறைப் பங்குகள் கட்டாயம் மேலே செல்லும். கடந்த வருடம் வங்கிப் பங்குகள் நன்கு கீழே சென்ற அதே நேரம், தகவல் தொழில் நுட்பம், மருந்துத் துறைப் பங்குகள் நல்ல உச்சத்திற்கு சென்று உள்ளன.
நீங்கள் ஒரு பண்ணை அமைக்க முடிவு செய்து கோழி மட்டும் வளர்பதற்கும், கொஞ்சம் கோழி, சில ஆடுகள், மாடுகள், நாட்டுக் கோழி, வான் கோழி இப்படி வளர்த்தல் லாபமும் அதிகம், கோழிக்கு நோய் வந்து கோழி ஒருவேளை இறந்தால் ஆடுகள், மாடுகள், வான் கோழி அந்த நஷ்டத்தை ஈடு செய்யும். அது மட்டும் இன்றி ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொன்றும் பலன் தரும். சில குறுகிய காலப் பலன், சில நடுத்தர காலப் பலன், சில நீண்ட காலப் பலன் அதே சமயம் பெரிய லாபம்.
3. ஊகம் முடிவில் சோகம்.
உங்கள் ஊருக்கு அருகில் பெரிய தொழிற்சாலை, அல்லது மருத்துவக் கல்லூரி வரப் போகிறது என்ற செய்தி வந்ததும், சந்தை விலையினை விட அதிகம் கொடுத்து இடம் வாங்கி வைத்துக் கொள்வது போல் தான் ஊக வணிகம் என்பது. வந்தால் கொள்ளை லாபம், ஒரு வேளை வராவிட்டால் உங்கள் நிலைமை அதோ கதிதான். அது போல்தான் பங்கிலும் விரட்டி விரட்டி வாங்குவது என்பதும். இன்று ஒரு லட்சம் சந்தை மதிப்புள்ள இடத்தினை தொழிற்சாலை வரும் என நம்பி ஐந்து லட்சம் கொடுத்து வாங்குவதற்கும், ஒரு லட்சம் மதிப்புள்ள இடத்தை பேரம் பேசி 50000 அல்லது 75000 குறைத்து வாங்கு வதற்கும் உள்ள வித்தியாசம் தான் pe ratio பார்த்து ஒரு பங்கினை வாங்குவதும். தொழிற்சாலை வந்தாலும் நல்ல லாபம், வராவிட்டாலும் ஒரு லட்சம் சந்தை விலைக்கு விற்றால் கூட லாபம் தான், கட்டாயம் சந்தை விலைக்கு விற்கவும் இயலும். ஆனால் ஐந்து லட்சம் கொடுத்து வாங்கிய இடத்தை தொழிற்சாலை வராவிட்டால் ஐந்து லட்சம் வர பல ஆண்டுகள் கட்டாயம் ஆகலாம், சில நேரம் சந்தை விலை ஐந்து லட்சம் வராமல் கூடப் போகும் அபாயம் உண்டு.
பங்குச் சந்தை பற்றிய மாறாத உண்மைகள்:
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html