அதிகமானவர்களுக்கு
நீண்ட காலமாக இருக்கும் மிகப்
பெரிய சந்தேகம் இது.
முதலில்
இந்த இரு பாலிசிகளுக்கும் இடையை
உள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொள்ளுவது நல்லது.
தனிப்பாலிசி
என்பது தனிப்பட்ட நபர் ஒருவர் பாலிசி
தொகைக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை
எடுத்துக் கொள்வது.
ஃப்ளோட்டர்
பாலிசி என்பது ஒட்டு மொத்த
குடும்பத்துக்கும் சேர்த்து ஒரே பாலிசி. இதில்,
கவரேஜ் என்பது சுழற்சி முறையில்
இருக்கும். அதாவது, கவரேஜ் தொகையை,
தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர் ஒருவரே
மொத்தமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனுடன்
அந்த வருஷத்துக்கான கவரேஜ் முடிவுக்கு வந்து
விடும். முழுத் தொகையும் பயன்படுத்தப்படவில்லை
என்கிற போது மீதி இருக்கும்
தொகையை ஏற்கெனவே சிகிச்சை எடுத்துக் கொண்டவரோடு சேர்த்து குடும்பத்திலுள்ள இதர உறுப்பினர்கள் பயன்படுத்திக்
கொள்ளலாம்.
பிரீமியச்
செலவை பொறுத்த வரையில் ஃப்ளோட்டர்
பாலிசிதான் லாபகரமாக இருக்கிறது. இதை ஓர் எளிய
உதாரணம் மூலம் பார்ப்போம்.
உதாரணத்துக்கு
நண்பர் குடும்பம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
நண்பரின்
வயது 32. அவரின் மனைவி வயது
28, பெண் குழந்தையின் வயது 5..
நண்பர்
தனக்கு மற்றும் மனைவிக்கு தனித்
தனியாக மூன்று லட்சம் ரூபாய்க்கு
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார் என்று
வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பாலிசிக்கும் ஆண்டு
பிரீமியம் 6000 ரூபாய். பிள்ளைக்கு தனியே
ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெல்த்
இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் ஆண்டு
பிரீமியம் 1,000 ரூபாய். ஆக மொத்தம்
7 லட்ச ரூபாய் கவரேஜ்க்கு மொத்த
குடும்பத்துக்கு ஆண்டு பிரிமியம் 13,000 ரூபாய்.
இதற்கு
பதில் மொத்த குடும்பத்துக்கும் 10 லட்ச ரூபாய்
கவரேஜ்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து கொண்டால்
ஆண்டு பிரீமியம் 13,000 ரூபாய்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக