வெள்ளி, 21 செப்டம்பர், 2012

RAKESH JHUNJHUNWALA-பங்குச்சந்தை இன் முடிசூடா மன்னன்


பங்கு சந்தை என்றாலே பயம் . பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு மன நிலைமை நம்மிடம் இருக்கிறது பங்கு சந்தை இல் வெற்றி பெற்ற சிலரின் சரித்திரத்தை எடுத்து பார்த்தால் , அவர்களது வெற்றி இன் ரகசியம் புரியும் இந்த பதிவில் ஒரு சாதாரன மனிதர்  எவ்வாறு பங்கு சந்தை இல் வெற்றி பெற்றார் என்பதை பார்போம்.சாதாரன மனிதர்களும் பங்கு சந்தை இல் லாபம் பெற முடியுமா என்பதற்கு இவர் ஒரு எடுத்து காட்டு .
RAKESH JHUNJHUNWALA இவர் தான் இன்றைய இந்திய  பங்கு சந்தை இல் "காளை இன்  செல்ல பிள்ளையாக " வர்ணிக்க படுகிறார்.
பிஎஸ்இ சென்செக்ஸ் 150  புள்ளிகளாக  இருந்த போதுஅவர் 1985 இல் தனதுவாழ்க்கையைதொடங்கினார்.அவர்மாதங்களுக்கு முன்பு RS 43 வாங்கிய டாடா டி (TATA  tea ) பங்குகள் ரூ 143  விலையில் வர்த்தகமான போது தனது முதல் லாபத்தை பார்த்தார். பிறகு படி படியாக billionareஆகியது தனி வரலாறு. நீண்ட கால முதலீட்டில் பங்குகளை வாங்கினால் நிச்சியம் லாபம் பார்க்கலாம் என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.அவருடைய கொள்கைஹளை நாமும் பின் பற்றினால் ,லாபம் அடையலாம்.அவருடைய கொள்கைகளில் சிலவற்றை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.
 1 )buy  right  AND  hold  tight  இது தான் இவரது தாரக மந்திரம்.சரியான சமயத்தில் பங்குகளை வாங்கி நீண்ட காலம் வைதிருந்து லாபம் பார்ப்பது.அனால் அவை அடிப்படையில் நல்ல தர மான பங்குகளாக இருக்க வேண்டும்.
2)கண்மூடித்தனமாபெரிமுதலீட்டாளர்கள் சொல்வதை பின்பற்ற கூடாது .
3 ) பங்குசந்தைன் அடிப்படைகளை தெரிந்து கொண்டு , நீங்களாக சந்தை இன் போக்கை தீர்மானிக்க கற்றுக்கொள்ள கொள்ள வேண்டும்.
4) நீங்கள் ஒரு பங்கினை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் வியாபாரத்தையும் சேர்த்து வாங்குவதாக அர்த்தம் .அதனால் அந்த வியாபாரம் நீண்ட காலத்திற்கு நிலைக்குமா ,அந்த தொழிலுக்கான எதிர்காலம் அகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்.
5) எல்லோரும்   வாங்கும் போது விற்று விடு .விற்கும் போது வாங்கு.
6 )எந்த ஒரு பங்கையும் அதிக  விலை கொடுத்து வாங்காதே .
7 )ஒரு நிறுவனதினுடிய வளர்ச்சி விகிதம் பிடித்திருந்தால் , அந்த பங்கினை வாங்கி , அதற்கு சிறிது காலம் அவகாசம் கொடு .
8)உன்னுடைய பங்கு நீ விற்கலாம் என்று வைத்திருந்த விலையை அடைந்து விட்டால் , நிச்சியமாக அதை விற்று விடு .என்னும் அதிகமாக போகும் என்று வைத்து இருக்க்க வேண்டாம் .
9)தோல்விக்கு தயாராக இரு .எவளவு தோல்வி வந்தாலும் அதை தாங்கும் மனபக்குவம் வந்த பிறகே பங்கு சந்தை இல் வியாபாரம் செய்.
10 )யார் சொன்னாலும் கேக்காதே .பங்கினை வாங்கு வதற்கு முன்பு ஆராய்ந்து  முடிவு எடு.
11 )நிறுவனத்தினுடைய management எவ்வாறு உள்ளதை பார்த்து முடிவு எடு.
12 )அடுதவருடைய பணத்தில் முதலிடு செய்யாதே . கடன் வங்கியும் பங்கு சந்தையில் வியாபாரம் செய்யாதே
13 )உனக்கு என்று ஒரு போர்ட்போலியோ வை உருவாக்கு. அதில் 1-15  நிறுவனத்தின்  பங்குகளை சேர்த்து  கொண்டு மெதுவாக முதலீடு செய் .
14 )பங்குகளை அவசர பட்டு வாங்காதே.
15 )மற்றவர்கள் கண்டு கொள்ளாத, அடிபடையில் நல்ல பங்குகளாக,குறைந்த விலை இல் வாங்கி போடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக