ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கமாடிட்டி சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி?


கமாடிட்டி (பொருள் வணிகம்)
தங்கம் விலை உச்சகட்ட வேகத்தில் ஏறிக்கொண்டே வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் வெள்ளி போன்றவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. தங்கத்தை ஆபாரணமாக வாங்கி விற்பதன் மூலம் ஏற்படும் செய்கூலி சேதார இழப்புகளை கணக்கிட்டால் ஆபாரணமாக தங்கம் வாங்குவது சரிபட்டு வராது என்று தங்கத்தில் முதலீடு செய்ய எக்ஸ்சேஜ் டிரேடட் (.டி.எப்) பண்டுகள் பக்கம் சிலர் போக, சிலர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் யூக வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

வேறு எந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்தாலும் முழுதொகையையும் செலுத்தியே அதற்கான தங்கத்தை வாங்க முடியும். ஆனால் யூக வணிகத்தில் 100 கிராம் தங்கம் வாங்க விரும்பினால் அன்றைய விலையில் சுமார் 4 முதல் 7 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும்!!!

உதாரணமாக 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் தற்போதைய விலை ரூபாய் 2700 என்று வைத்துக்கொள்வோம் 100 கிராம் தங்கம் 2,70,000 (இரண்டு லட்சத்தி எழுபதாயிரம்) ரூபாய் வேண்டும். ஆனால் ஆன்லைன் பொருள் வணிக சந்தை 4 முதல் 7 சதவீதம் மட்டும் அதாவது அதிகபட்சமாக வெறும் 18,900 மட்டும் விளிம்பு தொகையாக செலுத்தினால் போதும் 100 கிராம் தங்கம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

வாங்கிய பின்னர் 1 கிராம் தங்கம் 50 ரூபாய் விலை ஏறினால் உங்களுக்கு 100x50 = 5,000 ரூபாய் லாபம். தரகு தொகை மற்றும் ஸ்டாம்ப் சார்ஜ் போன்ற செலவீனங்கள் .05 சதவீதம் என்று வைத்துக்கொண்டால் அதிகபட்சமாக 300 ரூபாய் ஆக 5,000 - 300 = 4,700 ரூபாய் உங்களுக்கு லாபம். வாங்கிய அன்றே விலையேறினாலும் உடனே விற்றுவிட்டு வெளியே வரலாம். ஆக உங்கள் முதலீடு 18,900 லாபம் 4,700 ஆக மொத்தம் 23,600 உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அட பணம் சம்பாதிக்க இப்படி ஒரு சுலபமான வழியா என்று வியக்க வேண்டாம். ஈட்டி போன்று இரண்டு பக்கமும் கூர்மையான யூக வணிகத்தின் இன்னொரு முகம் மிகவும் பயங்கரமானது. 18,900 விளிம்புத் தொகை செலுத்தி காலையில் 100 கிராம் யூக வணிகத்தில் தங்கம் வாங்குவதாக வைத்துக்கொள்ளோம். மாலையில் 1 கிராம் தங்கம் 50 ரூபாய் குறைவதாக வைத்துக்கொள்வோம் 5,000 ரூபாய் நட்டத்தை நீங்கள் ஈடு செய்ய வேண்டியிருக்கும்.

தங்கம்தான் தினமும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறதே அதனால் வாங்கிப்போடலாம் இறங்கினால் பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியமாக ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருந்தால் விளிம்புத் தொகையுடன் விலைகுறைந்தால் ஏற்படும் இழப்பிற்கு ஈட்டுத்தொகையாக கொஞ்சம் பணத்தை கைவசம் வைத்திருக்கவேண்டும். 100 கிராம் தங்கம் வாங்க 30,000 ஆயிரம் உங்கள் கணக்கில் இருந்தால் இன்று விலை குறைந்தாலும் நாளை விலையேறும் போதும் விற்று நட்டத்தை தவிர்ப்பதுடன் லாபத்துடன் வெளியே வரலாம்.

• எக்ஸ்சேஜ் (Exchange)
இந்தியாவை பொருத்தவரை MCX என்றழைக்கப்படும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஜில் தங்கம் அதிகம் வர்தகமாகின்றுது. இந்தியாவில் தேசிய காமாடிட்டி எக்ஸ்சேஜ்கள் மத்திய அரசின் SEBI மற்றும் FMC (Forward Market Commission) ஆகியவற்றின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றன.

லாட் சைஸ்
பொருள் வணிகத்தில் தங்கம் வாங்கும் போது நீங்கள் விரும்பும் எடைகளில் வாங்க முடியாது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே வாங்கி விற்க முடியும் இந்த அளவுகளை லாட் சைஸ் என்கிறோம். தங்கத்தை பொறுத்த வரை 1 கிலோ, 100 கிராம், 8 கிராம் அளவுகளில் கிடைக்கின்றது. முறையே GOLD, GOLD MINI, GOLD GUNIA என்ற பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.

காண்ட்ராக்ட்
முன்பேர வணிகம், யூக வணிகம் என்பது தங்கத்தை பொறுத்தமட்டில் 2 மாத ஒப்பந்தகாலம் உடையதாகும். ஒப்பந்த இறுதி தேதிவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கி விற்கலாம். வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11.30 வரையும் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை வணிகத்தில் ஈடுபடலாம். ஞாயிறு மற்றும் விழாகாலங்களில் மார்கெட் இயங்காது.

ஆன் லைன் வர்த்தகம்
தேசிய கமாடிட்டி எக்ஸ்சேஜ் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் நீங்கள் வீட்டிலிருந்தபடியே இணைய உதவுயுடன் தங்கத்தை வாங்கி விற்கலாம். அல்லது அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட புரோக்கிங் நிறுவனத்தில் நேரடியாக சென்று வணிகம் செய்யலாம்.

புரோக்கிங் நிறுவனங்கள்
இந்த வர்த்தகத்தில் ஈடுபட MCX அங்கீகரிப்பட்ட புரோக்கிங் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் சப்-புரோக்கர்கள் மூலம் டிரேடிங் கணக்கிணை துவங்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்
பொருள் வணிகத்தில் ஈடுபடுவதற்கான கணக்கிணை துவங்க கீழ்கண்ட ஆவணங்கள் தேவை
1. PANCARD Xerox
2. Address Proof any one (a) Ration Card (b) Passport (c) Voter ID
3. Bank Passbook First Page and Statement Xerox (or) Canceled Cheque incase name printed in cheque.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக