வியாழன், 27 ஜூன், 2013

ஹிந்தி கற்பது எளிது-2

உயிரெழுத்துக்கள்/ மெய்யெழுத்துக்கள்
இரண்டாம் பாடத்தில் ஹிந்தி உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றின் எழுத்து வடிவம் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றைக் காண்போம். வார்த்தைகள் உருவாக்கத்தில் இது மிகவும் உதவும் என்பதால் திரும்பத் திரும்ப எழுதி, உச்சரித்து பார்த்தால் விரைவாக கற்றுக் கொள்ளலாம்.
ஹிந்தி எழுத்துக்கள் தேவநகரி எனப்படுகிறது.
உயிரெழுத்துக்கள் (Vowels) மொத்தம் 11

மெய்யெழுத்துக்கள்(Consonants) மொத்தம் 36
 சரி வாருங்கள் எப்படி உச்சரிப்பது என்று பார்ப்போம்.http://www.hindibhasha.com/ என்னும் இணையத்தில் உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் உச்சரிப்பினை அறிந்து கொள்ள சிறந்த தளமாக இருக்கிறது. உச்சரிப்புகளை பழகிய பின் Test என்னும் இணைப்பில் சென்று எழுத்துக்களின் பரிட்சயத்தை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உச்சரிப்பு என்று வரும் போது Voiceless Anaspirated, Voiceless Aspirated, Voiced Anaspirated, Voiced Aspirated , nasalஎன்று ஐந்து வகையாக ஹிந்தி மெய்யெழுத்துக்கள் பகுக்கப்பட்டுள்ளன. அதெல்லாம் நமக்கெதுக்கு… மேற்கண்ட இணைய தளமே உச்சரிப்புப் பயிற்சியில் தேர்ச்சி பெற போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக