வியாழன், 27 ஜூன், 2013

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

பணம் செய்ய உதவும் இணையதளங்கள்

ஏற்கனவே பங்குச் சந்தை பற்றிய இணையதளங்கள் இடுகைக்கு இருந்த வரவேற்பும் இந்த இடுகைக்குக் காரணம். இதுவரை இந்த இடுகை 600 முறை பார்வையிடப்பட்டுள்ளது. தினமும் ஒருவராவது இதனைப் படித்துப் பயன்பெறுகிறார். இது போன்ற பயனுள்ள இணையதளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் விளைவே பின்வருகிறது.
பணம் சம்பாதிக்க, சேமிக்க, நல்வழியில் செலவழிக்க வழிகளை தந்துதவும் இணையங்களைக் காண்போம்.
முதலாவதாக,

Google  ளின் ஒரு சேவை. இங்கே யார் வேண்டுமானாலும் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் Tips கொடுக்கலாம். Google பயனர்கள் வாக்களிக்கலாம். சிறந்த Tips முன்னணியில் இருக்கும். Finance தலைப்பிலுள்ள Tips மிகவும் பயனளிக்கும் என நம்பலாம். Online ல் பில் கட்டணங்களை செலுத்துங்கள், நேரம், பெட்ரோல் ஆகியவற்றை சேமியுங்கள் (How to Pay your BSNL Bills Online?) என்பது போன்ற ஒரு வரி Tips நிறைய காணக் கிடைக்கின்றன.
இரண்டாவதாக,

இந்த இணையதளம் பன்முகத் தன்மைகள் கொண்டது. Loan, Life Insurance, Fixed Deposits போன்ற சேவை வழங்கும் நிறுவனங்களை Compare செய்ய உதவுகிறது. உதாரணத்திற்கு Fixed Deposit ற்கு அதிக வட்டி வழங்கும் Bank ஐ 39 வங்கிகள் அடங்கிய வரிசையில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். இதே போல் Mediclaim அல்லது மற்ற Insurance சேவையில் உள்ள நிறுவனங்களின் Premium தொகையை ஆராய்ந்து நமக்குத் தேவையான திட்டத்தை தேர்வு செய்யலாம்.
மூன்றாவதாக,

Google ன் Tipjar போன்றதொரு இணையதளம். சிறிது விளக்கங்களுடன். இங்கே பணத்தை சேமிக்க மட்டுமல்ல, Rapid share போன்ற இணையதளங்களில் Download செய்யும் நேரத்தை குறைக்க, புதிதாக சந்தைக்கு வந்துள்ள Gadgets இயக்குவது பற்றி அறிய, Software ன் Shortcut அறிந்து வேலைப்பளுவைக் குறைக்க என்று ஏகப்பட்ட பயனுள்ள செய்திகள் நிரம்பிக் கிடக்கின்றன.
நான்காவதாக,

பெரும்பாலும் இணையதளங்கள் வைத்து பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கூறுகிறது. .Com Domain கள் வைத்திருப்பதன் பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இன்று இணைய உலகில் Traffic, SEO என்னும் இரு காரணிகள் ஒரு இணையதளத்தின் வளர்ச்சிக்கான அவசியமானவை. இது பற்றிய உதாரணங்களும் தரப்பட்டுள்ளன.
ஐந்தாவதாக,

இங்கே தொழில்முனைவோருக்கான குறிப்புகள், Freelancing பற்றிய கட்டுரைகள், கல்லூரி மாணவர்களுக்கான பகுதி நேரத் தொழில்கள் என பல்வேறு கட்டுரைகள் விளக்கமாக, உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆறாவதாக,

littlepeoplewealth.com இணையத்தில், 97 ways to Save Money என்னும் கட்டுரையில் உங்கள் செலவுகளைக் குறைப்பது, வருமானத்தினை அதிகரிப்பது, குழந்தைகள் செலவு, மளிகைச் செலவு போன்றவற்றைக் குறைப்பதற்கான வழிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக,
http://taxworry.com/
ஜூலை மாதம் வந்தாலே, வருமான வரி கட்டவேண்டுமே என்று அடிவயிறு கலங்க ஆரம்பித்து விடும். இங்கே வருமான வரி பற்றிய பல்வேறு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
கடைசியாக,

20 Money Hacks என்னும் தலைப்பிலான இடுகை மாறுபட்ட கோணத்தில் ஆனால் எளிமையாக நம் நிதி நிலைமயை உயர்த்தும் வழிகளைச் சொல்கிறது. உதாரணத்திற்கு உடற்பயிற்சி செய்யுங்கள் என்கிறது. இது எவ்வாறு நம் நிதி நிலைமையை உயர்த்தும்? உடற்பயிற்சி உடலை நோயிலிருந்து காக்கும். அதனால் மருத்துவச் செலவுகள் குறைவதால் சேமிப்பு உயரும் என்கின்றது. இது போன்று பல கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
பணம் பற்றிய ஒரு கூற்று:
When you have Money in Hand, only you forget who are you,
When you donot have Money in your Hand, the whole world forgets who you are.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக