வியாழன், 27 ஜூன், 2013

திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

நீங்களாகவே திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்,  மென்னூல், இணைய முகவரி மற்றும் ஆகியவை பற்றி….

திருமணப் பொருத்தம் – 10 பொருத்தம்:

 நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,
தினப் பொருத்தம் – ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.
கணப் பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.
மகேந்திரப் பொருத்தம் – திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.
ஸ்திரீ தீர்க்கம் –  திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.
யோனிப் பொருத்தம் – கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.
திருமணப் பொருத்தம் பார்க்கலாம் வாங்க!
ராசிப் பொருத்தம் – கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.
ராசி அதிபதி பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.
வசியப் பொருத்தம் – கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.
ரஜ்ஜுப் பொருத்தம் – தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.
வேதைப் பொருத்தம் – கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.
சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு. இவை இருக்கிறதா இல்லையா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா? இதோ உங்களுக்காக,

திருமண பொருத்தம் பார்க்க உதவும்மென்னூல்( E- Book):


திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்னூல்

இணையத்தில் காணக் கிடைக்கும் இந்த 30 பக்க மென் நூலில் திருமண பொருத்தம் ஒவ்வொன்றும் தனித்தனியாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பார்க்க உதவும் இந்த மென்னூலை இங்கேதரவிறக்கலாம்.

திருமண பொருத்தம் பார்க்க உதவும்இணையதளம் (Website):

தினகரன் ஜோதிடம் இணையதளத்தில் மணமகண் மற்றும் மணமகள் ராசி மற்றும் நட்சத்திரம் கொண்டு 10 திருமண பொருத்தங்களும் உள்ளதா இல்லையா என்றும், பொருத்தமில்லை/ சுமாரான பொருத்தம்/ பொருத்தம்/ நல்ல பொருத்தம் என்று இருக்கும் பொருத்தங்களின் அடிப்படையில் நமக்கு முடிவுகள் வருமாறி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி இதோ!

 திருமண பொருத்தம் பார்க்க உதவும்மென்பொருள் (Software):

உங்களுக்கு இணைய இணைப்பு எப்போதும் இருப்பதில்லை என்று வருத்தமா? கவலை விடுங்கள். இணையவெளியில் கிடைக்கும் இந்த மென்பொருள் கொண்டு நீங்கள் 10 பொருத்தமும் ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு இருக்கிறதா என்று பார்த்து விடலாம். அதோடு மட்டுமல்லாது, ஒரு ஆண்/ பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண்/ ஆண் நட்சத்திரங்களும், பொருத்தங்களும் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள் Print செய்து கொள்ள முடியும் என்பது மற்றுமோர் தனிச் சிறப்பு. இந்த மென்பொருள் இங்கே கிடைக்கிறது.
நன்றி: தமிழ்வளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக