வியாழன், 27 ஜூன், 2013

நல்ல நேரம்/ நாள் பார்க்கும் போது கவனிக்க வேண்டியன

நல்ல நேரம் அல்லது நல்ல நாள் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயங்களான திதி, கரி நாள், சந்திராஷ்டமம், ஓரைகள், பஞ்சகம் ஆகியன பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கரி நாள் ஆக இருக்கக் கூடாது.
திதிகளில் அஷ்டமி, நவமி திதிகளை தவிர்க்க வேண்டும்.
யோகம் மரண யோகமாக இல்லாமல் சித்த யோகம் அல்லது அமிர்த யோகம் ஆக இருக்க வேண்டும்.
ஓரைகளில் சூரியன், செவ்வாய் மற்றும் சனி ஓரைகள் இல்லாமல் பிற சுப ஓரைகள் வர வேண்டும்.
ராகு காலம், எமகண்ட நேரங்கள் இருக்கக் கூடாது.
பஞ்சகங்களில் பொதுவாக அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். முக்கியமாக கீழ்க்கண்ட பஞ்சகங்களில் கீழே குறிப்பிட்டுள்ள சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள்;      திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடி போகக் கூடாது.
மிருத்யு பஞ்சகம்: பங்குத் தொழில், லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கக் கூடாது.
அக்னி பஞ்சகம்: பஞ்சு, பெட்ரோல் பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக் கூடாது.
ராஜ பஞ்சகம்: அரசு, வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்கள், கடன் வங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது.
நிஷ் பஞ்சகங்கள் மிக்க சுபம்.
கௌரி பஞ்சாங்கத்தில் சோர, ரோக, விஷ காலங்கள் இருக்கக் கூடாது.
முக்கியமாக அந்த நட்சத்திரக்காரர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது.
நன்றி: தமிழ்வளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக