வியாழன், 27 ஜூன், 2013

TNSTC Online Booking

TNSTC Online Booking செய்வது பற்றிய விளக்கங்கள் படங்களுடன்:
தமிழ் நாடு அரசு TNSTC பேருந்துகளுக்கு இந்திய ரயில்வேயில் உள்ளது போல Online Booking வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான இணையதளம்: http://tnstc.in/
இந்த இணையதளத்தின் மூலம் தமிழகத்தின் எல்லா வழித்தடங்களிலுன் உள்ள Semi Deluxe Buses, Super Deluxe Buses, Video Coach Buses, Ultra Deluxe Buses, Air Suspension Buses, Air Condition Buses அனைத்திலும் வீட்டில் இருந்தவாறே அலைச்சலின்றி இணையத்தின் வாயிலாகவே Bus Ticket Booking செய்து கொள்ள முடியும்.
உங்களுக்கு தேவையான ஜன்னல் சீட்டை உங்கள் வீட்டு ஜன்னலோரத்திலிருந்தபடியே பதிவு செய்ய முடியும்.
இதற்கான படிப் படியான விளக்கம் இதோ:

TNSTC Online Booking – Registration / Sign In

TNSTC இணையதளத்தின் Online Booking செய்வதற்கென்று உள்ள Registration Form Fill செய்து உங்களுக்கென்று ஒரு Account பெற்றுக்கொள்ளுங்கள்.
TNSTC இணையதளத்தில் Sign In செய்து கொண்டு… E Ticket Booking என்ற பிரிவினை Select செய்து கொள்ளவும்.
புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தின் முதல் மூன்று எழுத்துக்களை கொடுத்து அந்த வழித்தடத்தினை பெறலாம்.
இப்போது வரும் Form ல் பயணம் செய்ய வேண்டிய தேதி, புறப்படும் இடம், சேரும் இடம், One way/ Round Trip, பயணிகள் விவரம், பேருந்தின் வகை ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.

TNSTC Online Ticket Reservation- Select Service/ Seat Layout

தேவைப்படும் பேருந்து வகையை List ல் இருந்து Select செய்து கொள்ளுங்கள்.
தற்போது கிடைக்கும் Seat Availability Layout ல் இருந்து உங்களுக்கு தேவையான இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பயணிகள் பெயர், பேருந்தில் ஏற வேண்டிய இடம், இறங்க வேண்டிய இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யுங்கள்

TNSTC Online Ticket Booking -Make Payment/ Print Bus Ticket

நீங்கள் எடுத்துச் செல்ல விரும்பும் ID Proof, உங்கள் Mail ID போன்ற விவரங்களை கொடுங்கள்.
Visa அல்லது Master Card மூலம் நீங்கள் இணையத்தின் வாயிலாகவே பணம் செலுத்த முடியும்.
தற்போது திரையில் உங்களது Ticket. TNSTC Online Booking மிகவும் எளிதானது. இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்!

TNSTC Online Bus Ticket – Mobile Booking

Mobile Phone மூலம் TNSTC Online Ticket Booking செய்ய

1 கருத்து: