வியாழன், 27 ஜூன், 2013

சர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....

இன்று, சர்க்கரை நோய் ரொம்ப `பொதுவான' வியாதியாகிவிட்டது. `40'-ஐ தாண்டிவிட்டாலே சர்க்கரை நோய் சாதாரணம் என்ற நிலை உருவாகிவிட்டது. உலகிலேயே அதிக செலவு வைக்கக்கூடிய வியாதியாக `டைப் 2' சர்க்கரை நோய் கருதப்படுகிறது. சர்க்கரை நோயுள்ள வயது வந்தோருக்கு, சர்க்கரை நோயில்லாதவர்களை விட இதய நோயால் உயிரிழப்பு அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்று அச்சுறுத்துகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு முந்திய `பிரி டயபடீஸ்' நிலையும் அதிகரித்து வருகிறது. விடலைப் பருவத்தினர் மற்றும் வயது வந்தோரில் 13 சதவீதம் பேருக்கு `பிரி டயபடீஸ்' இருக்கிறது. இவர்கள் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், 10 ஆண்டுகளில் `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படக் கூடும். `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்பட்டபின் அதைக் குணப்படுத்துவது கடினம்.
 
எனவே, `வருமுன் காப்போம்' அடிப்படையில் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது நம் கையில்தான் இருக்கிறது. `பிரி டயபடீஸ்' அல்லது சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய சில அபாய காரணிகள் இருக்கின்றன. பின்வரும் அவற்றை அறிந்து, தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுங்கள்:

1. உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.

2.சர்க்கரை நோயுள்ள பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைப் பெற்றிருப்பது.

3. வெளிநாடு வாழ் இந்தியராயிருப்பது. (வளர்ந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சர்க்கரை நோய் அபாயம் எட்டு மடங்கு அதிகம்.)

4. நான்கு கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது.

5. அதிக ரத்த அழுத்தம் (120/எம்.எம்.எச்.சி.) இருப்பது அல்லது அதற்காகச் சிகிச்சை பெறுவது.

6. எச்.டி.எல். அல்லது நல்ல கொலஸ்ட்ராலை 35 எம்.ஜி./டி.எல்.-க்குக் கீழே கொண்டிருப்பது.

7. `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' (பி.சி.ஓ.எஸ்.) இருப்பது.

8. முந்திய ரத்தப் பரிசோதனைகளில், `பாஸ்டிங் குளுக்கோஸ்' மற்றும் `குளுக்கோஸ் டாலரன்ஸ்' பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருவது.

9. இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய அதிக எடை, `அகன்தோசிஸ் நிக்ரிகன்ஸ்' (கழுத்தைச் சுற்றி அல்லது அக்குளில் அடர்நிற, பஞ்சு போல் மென்மையான தடிப்புகள்) போன்ற அறிகுறிகள்.
 
10. `கார்டியோவாஸ்குலார்' பாதிப்புக்கு உட்பட்டவராக இருப்பது. உங்களுக்குத் தற்போதைய சோதனையில் சர்க்கரை நோய் இல்லை என்று தெரியவந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனை செய்துகொள்வது அவசியம். சோதனை முடிவுகள், அபாயக் காரணிகள் அடிப்படையில் மேலும் குறுகிய இடைவெளியில் சோதனைகளைச் செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கூடும்.

1 கருத்து:

  1. Sir, What is the remedy to rectify problem faced by diabetic patient and which medicine is better homeopathy or allopathy or ayurvedha or magneto therapy or malarmedicine or siddha or unani. Kindly advise me

    R.Muthusubramanian
    Mob 8056272972 E-mail muthu_muthusubramanian@hotmail.com

    பதிலளிநீக்கு