TNEB Online Bill Payment பற்றிய விளக்கம் – படங்களுடன்
தமிழ் நாடு மின்சார வாரியம் இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக விழுப்புரம், கோவை, திருச்சி, சென்னை, வேலூர், ஈரோடு, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TNEB Online Bill Payment – Regions:
TNEB Online Bill Payment செலுத்துவதற்கான இணையதளம் : https://www.tnebnet.org/awp/login
TNEB Online Bill Payment Registration:
TNEB இணையதளத்தில் உறுப்பினராகவும். உங்களது மின்சார அட்டையில் உள்ள உங்களது Consumer Number இதற்கு தேவைப்படும். உதாரணத்திற்கு:
மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் Region Code இல்லாமல் வெறுமனே Section Code, Distribution Code மற்றும் Service Number மட்டும் கொடுத்து உங்களது பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்துக் கொள்ளவும். உங்களது Mail ID மற்றும் முகவரி போன்ற விவரங்களை கொடுத்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும்.
TNEB Online Bill Payment – Payment History and Bill Status:
உங்களது Bill பற்றிய விவரங்கள், மாதாந்திரப் பயன்பாட்டுக் கட்டணம், நீங்கள் பணம் செலுத்திய விவரம் ஆகியவை பற்றிய விவரங்கள் இங்கே காணலாம்.
பணம் செலுத்துவதற்காக நீங்கள் Visa மற்றும் Master போன்ற Credit/ Debit கார்டுகளை உபயோகித்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாது Net Banking மூலமும் பணம் செலுத்தலாம்.
உங்களது பயன்பாட்டுக் கட்டணம் (Monthly Bill) மட்டுமல்லாது முன்பணமும் (Advance) செலுத்தலாம்.
நீங்கள் பணம் செலுத்தியதற்கான இரசீது உங்கள் Mail ID க்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
Mobile Alert மூலமும் பணம் செலுத்தியதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். செய்வார்கள் என நம்புவோம்.
TNEB Online Bill Payment – Support:
இந்த இணையதளத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இதன் Customer Support வசதி. ஒவ்வொரு பயனருக்கென்று தனித் தனியாக விசாரணைகளை இணையத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் உங்கள் TNEB Bill Status, TNEB Payment Enquiry போன்றவற்றை இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடியே அலைச்சலின்றி மின்கட்டணம் செலுத்தி பயனடையுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் E Mail ல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
very informative article, thanks for your effort. tneb online payment
பதிலளிநீக்கு