· பிள்ளைகளுக்காக
வாழ்வதாக கூறி சொத்திற்காக உழைப்பவர்கள்
பிள்ளைக்கு கல்வியே சொத்து என்பதை மறந்து போய் விடுகின்றனர்.
பிள்ளைக்கு கல்வியே சொத்து என்பதை மறந்து போய் விடுகின்றனர்.
· அதிகம் சொல்ல விரும்புபவன் குறைவான வார்த்தைகளையே
பயன்படுத்துவான்.
· கடமையை ஒழுங்காய் செய்தாலே கடவுளைக் காணலாம்.
· திட்டமில்லாத செயல் யாவும்
நஷ்டமே.
· பிறரிடம் அன்பு செலுத்தி
உங்களை துய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
· பக்தி மிகுதியாவதற்குத்
தியானம் அதிகம் செய்ய வேண்டும்.
· கடமையை முன்னிட்டு செய்த
செயலுக்கு வெகுமதி எதிர்பாக்கக் கூடாது
· நல்ல நம்பிக்கையில்
உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை
· பயப்படுத்துபவனும், பயத்தை
போக்குபவனும் இறைவனே
· முன்னேற்றம் என்பது நமது
கைகளில்தான் இருக்கிறது
· சிக்கனமில்லாமல்
வாழ்ந்தால் சிறு குடும்பமும் சீரழிந்துவிடும்
· மரமானது அதன் கனியைக்
கொன்டு அறியப்படுகிறது
· மகிழ்ச்சியும் உழைப்பும்
வாழ்நாளை வளர்ப்பன
· அடக்கம் தான்
வெற்றிக்குச் சாவி
· கற்றவன் அதை விட்டுவிடக்
கஷ்டப்படுவான்
· அனுபவம் ஒரு கடுமையான
ஆசிரியர்
· விடாமுயற்சியுடையவன் தான்
விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்
· எதிர்காலத்தை எண்ணி
அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்
· ஒரு நல்ல காரியத்தில்
எப்போதும் உற்சாகத்துடன் ஈடுபட்டிருப்பது நல்லது
· நம்பிக்கைதான் சாதனைக்கு
அடிப்படை
· பாதையை சரியாய் போட்டால்
பயணம் சுபமாக இருக்கும்
· பேசிய பிறகு
வருந்துவதைவிட, பேசுவதற்க்கு முன்பே
யோசனை செய்.
· நண்பர்களைப் போலவே
தேர்ந்தெடுத்த சில நூல்களே தேவை.
· உடலுக்கு ஏற்படும் நன்மை, தீமை
ஆத்மாவிற்குக் கிடையாது.
· வாழ்க்கையின் உயர்வு உன்
நாக்கின் நுனியில் இருக்கிறது.
· சிக்கனம்தான் பெரிய வருமானமாகும்.
· அமைதியில்தான் உயர்வும்
உணர்வும் உள்ளது.
· தன்னைத்தானே தழ்த்திக்கொள்வது
மோசமான ஒரு நோய்.
· எல்லை மீறி சிரிப்பவன்
மூடன், சிரிக்காமல் இருப்பவன்
வஞ்சகன்.
· நல்ல காரியங்களை ஒருநாள்
கூட தாமதித்துச் செய்யாதே.
· நல்ல புத்தகங்களை
வாசியுங்கள்.உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.
· புனிதமான செயல்களில்
வாழ்வதுதான் புகழ் எனப்படும்.
· உயர்வு என்பது ஊக்கத்தின்
அளவைப் பொறுத்ததே ஆகும்.
· கடின உழைப்பு தெய்வ
வழிபாட்டுக்குச் சமம்.
· அபாயம் என்பது, அபார
மூளைகள் அவசரத்தில் செய்வது.
· நன்றாகச் சிரித்தால்
வீட்டில் ஒளி பரவும்.
· கடமை உணர்வே உன்
நேர்மையான வாழ்க்கைக்கு சூத்திரம்.
· பண்பாடு குன்றிய
இடத்தில்தான் பகைமையுணர்ச்சி அதிகம் காணப்படும்.
· மனோ தைரியம் இல்லையேல்
வாய்மை இல்லை.
· ஒவ்வொரு துன்பமும் நமக்கு
ஒரு வழிகாட்டி.
· உண்மையை நம்புவது
பக்தி.உண்மையை அறிவது ஞானம்.
· அதிகம் பேசுபவர்கள் எப்போதும் பெரும் அறிவாளிகளாய்
இருப்பதில்லை.
· கல்வியும் அறிவும்
சிற்ந்த நண்பர்கள்.
· உன் பேச்சு உன் புத்தி
கூர்மையை பிரதிபலிக்கும்.
· முன்பின் அறியாத வழிகளில்
ஒருவனாகப் போகக்கூடாது.
· துன்பம் வந்தபோது
அழுகிறவர்கள் அடிமைகளாவர்.
· குறி வைத்தால் மட்டும்
போதாது, அடிக்கவும் வேண்டும்.
· உற்சாகமும், முயற்சியும்
உள்ளவனுக்கு எங்கும் வேலை கிடைக்கும்.
· வாழ்வது முக்கியமல்ல, சிறப்பாக
வாழ வேண்டும்.
· தானம் எவனையும் வறியவன்
ஆக்கியதில்லை.
· நாணயமாக நடப்பவர்கள், ஒளிக்கும்
அஞ்சுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக